எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலாக செங்கோட்டையன்? திமுக அமைச்சர் சொன்ன தகவல்!

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலாக செங்கோட்டையன் பொறுப்பேற்க வேண்டும் என்று ஏற்கனவே ஜெயக்குமார் சொல்லியிருக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார்.  

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 12, 2024, 10:52 AM IST
  • பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்ற வேண்டும்.
  • அப்பொழுது தான் உண்மையான எதிர்க்கட்சியாக இருக்கும்.
  • சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் பேட்டி.
எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலாக செங்கோட்டையன்? திமுக அமைச்சர் சொன்ன தகவல்! title=

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவ அணி சார்பில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் முத்துக்கருப்பன் ஏற்பாட்டில் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே கோடைகால தண்ணீர் பந்தல் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், நகர செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது தொடர்பாக பதில் அளித்த அவர், ஈடி எதிர்ப்பு தெரிவித்தாலும் ஜனநாயக கடமை ஆற்றுவதற்கு ஒரு கட்சியில் தலைவர் என்ற முறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உரிமை உண்டு.

மேலும் படிக்க | விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷன்... 'ஒத்துழைக்காத காவல்துறை' - பொங்கிய பிரேமலதா!

அவர் தான் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர். அவர் கட்சிக்காக தேர்தல் பணியாற்ற வேண்டியது அவசியம். டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பணி என்பது தேவையானது. அது அவரது கட்சிக்கு வலு சேர்க்கும். எனவே அவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி தேர்தல் பணியாற்ற அனுமதித்துள்ளது. அது வரவேற்கத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆவேசமான பேச்சு, இந்தியா கூட்டணியை அவர் தாக்கி பேசுவது, இதுவே பாரதிய ஜனதா கூட்டணி தோல்வி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விட்டது என்பதற்கு எடுத்துக்காட்டு. குறிப்பாக குஜராத் மாநிலத்தில் பத்து தொகுதியில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் அது ஆச்சரியம்.

பாரதிய ஜனதா கூட்டணியில் தேர்தல் ஆணையமும் உள்ளது. தேர்தல் முடிந்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். சவுக்கு சங்கர் விவகாரத்தில் காவல்துறை உரிய சாட்சியங்களோடு, தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. சவுக்கு சங்கர் மீது பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு கிடையாது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக அரசின் மூன்றாண்டுகல ஆட்சிக்கு கிடைத்த பரிசு. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்ற வேண்டும். அப்பொழுது தான் உண்மையான எதிர்க்கட்சியாக இருக்கும். அதை விட்டுவிட்டு வேறு விதமான விமர்சனங்கள் அவர் ஈடுபட்டால், அவருடைய பதவிக்கு அது ஆபத்தாக அமைந்துவிடும். 

இருந்தாலும் அவருடைய பிறந்த நாளில் அவருடைய பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று சொல்வது அழகல்ல. அவர் பல நாட்கள் வாழ வேண்டும் என்று திமுக சார்பில் வாழ்த்துகிறோம். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, செங்கோட்டையன் தலைமையில் செல்கிறதா? அல்லது வேலுமணி தலைமையில் செல்கிறதா? என்பது தெரியவரும். அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலாக செங்கோட்டையன் பொறுப்பேற்க வேண்டும் என்று ஏற்கனவே ஜெயக்குமார் சொல்லியிருக்கிறார். அதை திமுக செய்ய மாட்டோம். ஆனால் பாரதிய ஜனதா கட்சி செய்யும் என்றார்.

மேலும் படிக்க | ராமஜெயம் கொலையாளிகளுக்கு ஜெயக்குமார் கொலையில் தொடர்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News