டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறாரா செந்தில் பாலாஜி? அமலாக்கத்துறையின் ப்ளான் என்ன?

Senthil Balaji arrest: அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர், டெல்லி அழைத்து செல்லப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jun 14, 2023, 10:59 AM IST
  • செந்தில் பாலாஜி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
  • நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • டெல்ல் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்படுவார் என கூறப்படுகிறது.
டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறாரா செந்தில் பாலாஜி? அமலாக்கத்துறையின் ப்ளான் என்ன? title=

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொருப்பில் இருந்த போது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதுகுறித்த விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை: 

தமிழகத்தின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ளவர் செந்தில் பாலாஜி. இவர், கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அவர் 100க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவில் புகார்கள் கொடுக்கப்பட்டன. 

இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கடந்த சில நாட்களாகவே இவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் இவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். , நேற்று காலை முதல் செந்தில் பாலாஜியின் வீட்டில் 17 மணி நேரம் சோதனை நடந்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜி இன்று அதிகாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அமைச்சருக்கு நெஞ்சுவலி!

அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் தற்போது ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார். இந்த நிலையில், இவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி வீட்டுக்கு கூடுதல் துணை ராணுவப்படையினர் வருகை - கைது செய்ய வாய்ப்பு?

டெல்லிக்கு அழைத்து செல்ல படுவாரா?

ஓமந்தூராரில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இன்னும் சில நாட்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவரது நிலையை பொறுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

முதல்வர் கண்டனம்:

செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட போது அவரை சந்திக்க அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்து. இதையடுத்து, விசாரணைக்கு ஒத்துழைத்தும் மனிதநேயமற்ற முறையில் நெஞ்சுவலி வரும் அளவிற்கு பா.ஜ.கவின் அமலாக்கத்துறையினர் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என முதலமைச்சர் மு.ஸ்டாலின் கண்டன அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். 

அவர் அறிக்கையில் கூறியுள்ளதாவது..

“தன்வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜகபழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான் என்று நான் ஏற்கனவே சொல்லிஇருந்தேன். இது மாதிரியான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வார்கள் என்றும் சொல்லி இருந்தேன்.அமைச்சர்செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்றைய தினம் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வந்தார். இந்த நிலையில் தேவையில்லாத வகையில் அத்துமீறி- அனுமதியின்றி பலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய கோப்பு ஆவணங்கள்நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்றபெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள்” என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி கைது? நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News