மாநகராட்சி பணியாளர்களை தாக்கிய பாஜகவினர் - 25 பேர் மீது வழக்கு பதிவு

மதுரை: பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக தல்லாகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் புகாரின் பேரின் பாஜகவை சேர்ந்த இருபத்தி ஐந்து பேரின் மீது வழக்கு பதிவு.

Written by - Shiva Murugesan | Last Updated : May 11, 2022, 12:20 PM IST
  • பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் உட்பட 25 பேர் மீது வழக்கு
  • சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
  • பாஜகவினர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி பணியாளர்களை தாக்கிய பாஜகவினர் - 25 பேர் மீது வழக்கு பதிவு title=

மதுரை: பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் உட்பட 25 பேர் மீது வழக்கு

மதுரை அழகர்கோவில் சாலை பகுதியில் உள்ள கோர்டியார்ட் விடுதியில் பாஜக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனை மாநில செயலாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் மாநில நிர்வாகிகளை வரவேற்பதற்காக அழகர்கோவில் சாலையில் அனுமதியின்றி 30-க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக மாநகராட்சி பணியாளர்கள் அதனை அகற்றியபோது பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாஜக மாவட்ட தலைவர் சரவணன் தலைமையிலான பாஜகவினர் மாநகராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் பாஜகவினரை தடுத்து நிறுத்தினர்.

இதனைதொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க: திமுகவுடன் தொடர்பில் இருக்கும் 2 பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் - புதுகுண்டு வீசிய திமுக எம்.பி

இந்த நிலையில் பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக தல்லாகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் புகாரின் பேரின் இருபத்தி ஐந்து பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக தமிழக பா.ஜ.க. மாவட்ட தலைவர்களை மாற்றி அமைக்கப்படும் என தமிழக பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை, இரு வாரங்களுக்கு முன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பா.ஜ. கட்சியின் மாநில துணைத் தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள், கட்சியின் பல்வேறு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அண்ணாமலை கடந்த வாரம் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாநில அணி தலைவர்களும் கலந்து கொண்டனர். மேலும் ஆலோசனை கூட்டத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். 

மேலும் படிக்க: ஆதீனத்திற்கு பல்லக்கு தூக்கப்போகும் அண்ணாமலை...

பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்காக அழகர்கோயில் பகுதியில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் பா.ஜ.க சார்பில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் மதுரை மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை என்றுகூறி, பேனர்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பாஜகவினர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அதன்பிறகு கட்சி பேனர்களை அகற்றியதைக் கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் வீட்டில் கொள்ளை - நகையை விற்கும் போது சிக்கிய திருடன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News