ரேக்ளா போட்டி நடத்த எதிர்ப்பு

மக்கள் எதிர்ப்பு காரணமாக பலத்த பாதுகாப்புக்கு நடுவே கோபையில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றபோதிலும், மாணவர்கள் விரைந்து வந்து அதை தடுத்து நிறுத்தி, அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Last Updated : Jan 22, 2017, 12:28 PM IST
ரேக்ளா போட்டி நடத்த எதிர்ப்பு title=

கோவை: மக்கள் எதிர்ப்பு காரணமாக பலத்த பாதுகாப்புக்கு நடுவே கோபையில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றபோதிலும், மாணவர்கள் விரைந்து வந்து அதை தடுத்து நிறுத்தி, அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டிற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவையில் ரேக்ளா போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ.,க்கள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். காலை 9 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்ட ரேக்ளா பந்தயங்கள் தொடர்ந்து 11 மணிக்கு மேல் நடத்தப்பட்டன. ரேக்ளா பந்தயத்தை அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்தார். 

இதற்கிடையில் அமைச்சர் வேலுமணியை சந்திக்க வேண்டும் என சில மாணவர்கள் அனுமதி கேட்டனர். இதனால் சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சுமார் 200 அதிக மாட்டு வண்டிகள் இதில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல வீரர்கள் போட்டியை புறக்கணித்தனர். இதனால் 3 வண்டிகள் மட்டுமே பங்கேற்றன.

ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற காளைகளை பயன்படுத்தும் விளையாட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கேட்டு மக்கள் போராடி வரும் நிலையில், எப்படியாவது இந்த ஒற்றுமையை கலைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போட்டி நடைபெற்றுள்ளது என்று மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

Trending News