கடந்த ஜூலை மாதத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா) கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், பிஎஸ்என்எல் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதன் மூலம் சாதனை படைத்தது. சுமார் 29 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்லில் இணைந்துள்ளனர் என TRAI வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
தொலைத் தொடர்புத்துறையில் தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம், அவற்றுக்கு கடும் போட்டியை கொடுக்கும் விதிமாக தனது 4G நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் 5ஜி சேவைக்கான பரிசோதனைகளையும் தொடங்கியுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இதன் மூலம் இணைய வேகம் அதிகரிக்கும் என்பதோடு, கட்டணங்களும் குறையும்.
BSNL நிறுவனத்திற்கு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்படுவது, நிறுவனம் அதன் சேவைகளை மேம்படுத்தியுள்ளதோடு, வாடிக்கையாளர்களின் தேவைகளை நன்கு புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது என்றால் மிகையில்லை.
நீண்ட காலமாக பல பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மெதுவான இணைய வேகத்தால் சிரமப்பட்டு வந்த நிலையில், பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கு செய்தி ஒன்றையும் வழங்கியுள்ளது. நிறுவனம் 2025 ஆம் ஆண்டின் மத்தியில் தனது 4ஜி நெட்வொர்க்கை வலுப்படுத்த 1 லட்சம் புதிய டவர்களை நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் வேகமான இணைய சேவையைப் பெற முடியும். மேலும், இப்போது நிறுவனத்தின் இந்த புதிய முயற்சியால் வாடிக்கையாளர்கள் சிறந்த நெட்வொர்க் அனுபவத்தைப் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | BSNL 5G... 5ஜி நெட்வொர்க் சோதனையை தொடங்கிய பிஎஸ்என்எல் ... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்
உங்கள் BSNL சிம்மில் சில சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் உங்கள் இணைய வேகத்தை பல மடங்கு வேகமாக அதிகரிக்க முடியும். உங்கள் தொலைபேசியின் செட்டிங்க்ஸில் சில மாற்றங்களைச் செய்து, அதிவேக இணையத்தை அனுபவிக்க முடியும்.
1. முதலில் உங்கள் தொலைபேசியின் செட்டிங்கஸ் -ஐ திறக்கவும்.
2. பின்னர் 'நெட்வொர்க்' அல்லது 'கனெக்ஷன்' என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
3. அதன் பிறகு 'மொபைல் நெட்வொர்க்' ஆப்ஷனுக்கு செல்லவும்.
4. இங்கே நீங்கள் '5G/LTE/3G/2G' ஆகிய ஆப்ஷன்களைக் காண்பீர்கள்.
5. இந்த ஆப்ஷனை கிளிக் செய்து, '5G' அல்லது 'LTE' (உங்கள் பகுதியில் எது கிடைக்கிறதோ அதை) தேர்ந்தெடுக்கவும். இப்படி செய்தால் உங்கள் இணைய வேகம் சிறப்பாக இருக்கும்.
மலிவான கட்டணத்தில், அதிவேக இணையத்தை விரும்புபவர்களுக்கு, BSNL 5G சேவை சிறந்த தேர்வாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். தனியார் நிறுவனங்கள் தங்கள் போஸ்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்களை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், BSNL ஏற்கனவே பல மலிவான திட்டங்களை வழங்குகிறது. எனவே, பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவைக்கான கட்டணம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | புதிய சிம் கார்டு விதிகள்... பயனர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ