'எம்ஜிஆர் தலைமையை விட்டுவிட்டு வந்தேன்... போயும் போயும் இபிஎஸ் உடனா இணைவேன்'- சுப்புலட்சுமி ஜெகதீசன் தடாலடி

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தான் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது என தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 25, 2022, 04:52 PM IST
  • சமீபத்தில் திமுகவில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகினார்.
  • இவர் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
  • சுப்புலட்சுமி ஜெகதீசன் இபிஎஸ் தலைமையில் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
'எம்ஜிஆர் தலைமையை விட்டுவிட்டு வந்தேன்... போயும் போயும் இபிஎஸ் உடனா இணைவேன்'- சுப்புலட்சுமி ஜெகதீசன் தடாலடி title=

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதிவை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்து விலகுவதாக கடந்த செப். 20ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 2009க்கு பிறகு தேர்தல் போட்டியிடுவதை தவிர்ப்பதாக அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்ததாகவும், ஸ்டாலினை முதலமைச்சராக்குவதற்கே தொடர்ந்து களப்பணி செய்துவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி, ஸ்டாலின் முதலமைச்சராகி பாராட்டத்தக்க வகையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இது தனக்கு மனநிறைவைத் தருவதாகவும் கூறியிருந்தார். எனவே, அந்த மனநிறைவுடன், நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, கட்சிப் பதவியை ராஜினாமா செய்து, தனது விலகல் கடிதத்தையும் கடந்த ஆக. 29ஆம் தேதி அன்றே திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அனுப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

Subbulakshmi Jagadeesan

மேலும் படிக்க | சட்ட விதிப்படி புதிய துணை பொது செயலாளர் நியமிக்கப்படுவார்: TKS இளங்கோவன்

'அனைத்தும் பொய்'

அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தாலும், அவருக்கு திமுக மூத்த நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும், அதனாலே அவர் கட்சியில் இருந்து விலகியுள்ளார் என்றும் பேச்சுக்கள் அடிப்பட்டன. அந்த வகையில், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோட்டில் இன்று மாலை, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும் தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தனது அறிக்கையிலேயே தெளிவாக குறிப்பிட்டுள்ளதாகவும் தனியார் தொலைக்காட்சியிடம் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,"எம்ஜிஆர் காலத்திலேயே, அவரது செயல்பாடுகள் பிடிக்கவில்லை என அதிமுகவில் விலகியவள், நான். தற்போது, போயும் போயும் எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் சேருவேன்" என்றார். 

'திக-விற்கு மட்டும்தான் தகுதியிருக்கிறது'

மேலும், நான் சேர்வதற்கு திராவிடர் கழகத்தை தவிர தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சிக்கும் அந்த தகுதியில்லை என கூறினார். இருப்பினும், அரசியலில் இருந்து ஓய்வு பெறவே திமுகவில் இருந்து விலகியதாகவும், வேறு கட்சியில் இணையும் எண்ணம் துளியும் இல்லை என உறுதியாக கூறினார். 2004-2009 காலகட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், ஈரோடு மாவட்ட மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அவர், பாஜகவின் சி.கே. சரஸ்வதியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | திமுகவில் ஜனநாயகம் இல்லை, அதனால்தான் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறி உள்ளார்: ஆர்.பி.உதயகுமார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News