மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் வைத்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான சுப்பிரமணியன் சுவாமியின் 83ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள் அவரை வாழ்த்தி பேசினர். இதையடுத்து மேடையில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, “இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வர உள்ளது. நாட்டின் கலாசாரத்தை வெள்ளைக்காரர்கள் எரித்ததால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி சென்றோம். தற்போது அதிலிருந்து மீண்டு சொந்த காலில் நிற்கும் அளவிற்கு வளர்ந்துள்ளோம். ஒரு நாடு சிறந்து விளங்க பொருளாதாரக் கொள்கையும், ராணுவக் கொள்கையும் பலமாக இருக்க வேண்டும்.
கருணாநிதி என்னிடம் பேசும்போது திராவிடர் என்று கூறினார் அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டுவிட்டு அது சமஸ்கிருதம் என்று கூறினேன். உங்கள் பெயரில் 40% சமஸ்கிருதம் என்று அவரிடம் விளக்க நூலை வைத்து விவரித்தேன். ஆங்கிலேயர்கள் ஆரியன், திராவிடன் என்ற பிரிவினையை உண்டாக்கினார்கள் திராவிட என்பது மூன்று கடலும் சங்கமிக்கும் இடம் என்று பொருள். இது திராவிடமாக மாறியது. நானும் கருணாநிதியும் பலமுறை சண்டையிட்டுக்கொள்வோம் ஆனால் எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் கிடையாது.
சேது சமுத்திர திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தபோது நான் அவரை எதிர்த்தேன். அதற்கு யார் ராமர் என்று கருணாநிதி என்னிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மறுநாள் அவர் உடல் நலம் குன்றி சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நான் அவருக்கு "கெட் வெல் சூன்" ராமர் யார் என்று தெரிகிறதா என்று கூறினேன்.
தமிழன் மூளையில் நம்பர் ஒன்னாக இருக்கிறான். ஆனால் தைரியம் இல்லை. என்னை ஏன் இவ்வளவு தைரியமாக இருக்கிறீர்கள் என்று வட மாநிலத்தில் உள்ள தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். புதிய தமிழனை உருவாக்க வேண்டும் ஆரியன, திராவிடன் என்ற ஒன்று இல்லை. ஆ.ராசா மோசமாக பேசிவருகிறார். அது தொடர்பாக வழக்கு ஒன்றை கொடுத்துள்ளேன் விரைவில் அவர் சிறைக்கு செல்வார்.
கம்பராமாயணத்தை எழுதிய வால்மிகியும் பிற்படுத்தப்பட்டவர்தான். ஆனால் அவரின் தாய், தந்தை பிராமணராக இருந்தவர்கள். யாராவது தகராறு செய்ய தயாராக இருந்தால் நானும் தகராறு செய்ய தயாராக இருக்கிறேன்.
விடுதலை புலிகளுக்கு தமிழ்நாட்டில் சிகிச்சையளிக்கக்கூடாது; அப்படி அளித்தால் ஆட்சி கலைப்படும் என்றேன். ஆட்சியை கலைத்தால் ரத்த ஆறு ஓடும் என கருணாநிதி என்னிடம் கூறினார். 1991ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் ஆட்சி கலைந்தது. ஒரு சைக்கிள்கூட எரியவில்லை. அடுத்த 2 மாதங்களில் நடைபெற்ற தேர்தலில் திமுக இரண்டு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.
கருணாநிதி தனது மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தவர். தமிழில் பெயர் வைக்கவில்லையே மாறாக ரஷ்யன் பெயரை வைத்துள்ளார். தமிழ் தாய்மொழி. இந்தி கற்றுக்கொண்டால் என்ன தவறு. கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டுமென்று என்று நான் கூறவில்லை. இந்தியை கற்றுக்கொள்ள விரும்புபாவர்களுக்கு ஏன் தடை போடுகிறீர்கள்.
மேலும் படிக்க | இந்தியாவில் RSS தான் பெரிய தீவிரவாத அமைப்பு: PFI அமைப்பினர்
பெரியார் இருந்திருந்தால் இன்று திமுக இருந்திருக்காது. பெரியார் என்று அழைக்கப்படும் ராமசாமி நாயக்கர் ஈரோட்டில் அவருடைய அப்பா கோயில் கட்டிக்கொடுத்து கோயிலை தனது மகன் ராமசாமி நாயக்கர் பராமரிப்பார் என்று உயில் எழுதி வைத்தார். அதன்படி
கோயிலை முறையாக பராமரித்திற்காக 25 ஆண்டுகள் தொடர்ந்து முதல் பரிசை பெற்றுள்ளார். இது கி.வீரமணிக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ