ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே கோடை சிறப்பு மலை ரயில்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்ல மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 21, 2022, 02:10 PM IST
  • சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்
  • ஊட்டியில் தற்போது கோடை காலம்
  • ரயிலில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே கோடை சிறப்பு மலை ரயில் title=

மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்கின்றனர். காடுகளின் நடுவே இந்த ரயிலில் பயணிக்கும்போது, இயற்கை எழில் காட்சிகளை கண்டு களிக்கலாம் என்பதால் இதில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள்.

மேலும் படிக்க | சென்னை மெட்ரோ ரயிலில் பணிபுரிய வேலைவாய்ப்பு!

இந்த மலை ரயிலானது மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடையும். அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35க்கு மேட்டுப்பாளையம் வந்தடையும்.

ஊட்டியில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. இருப்பினும் அங்கு பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளிகள் விடுமுறை காரணமாக மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் டிக்கெட் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நாளை முதல் வருகிற ஜூலை மாதம் 16 ஆம தேதி வரை சனிக்கிழமைகளில் 9 முறை இயக்கப்படுகிறது. இதேபோன்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வருகிற 27 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 22 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் 9 முறை இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரயில் மேட்டுப்பாளையத்தில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடையும்.

அதேபோல் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு முதல் வகுப்பு ரூ.1,210, 2-ம் வகுப்பு ரூ.815, ஊட்டிக்கு முதல் வகுப்பு ரூ.1,575, 2-ம் வகுப்பு ரூ.1,065 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | Indian Railways: அப்பாடா, இனி டிக்கெட் முன்பதிவின் போது இதை செய்ய வேண்டாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News