சென்னையின் சலசலப்பான டி நகர் பகுதியில் உள்ள பெரிய நிறுவனங்கள் மாத இறுதி வரை மூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனா தாக்கத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள், மால்கள் மற்றும் பிற இடங்களை மூடுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள் அன்று உத்தரவிட்டதை அடுத்து அந்த செயல்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் பிரகாஷ் செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கையில், சென்னையில் கொரோனா வைரஸ் எதிராக "போர்க்கால அடிப்படையில்" பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவித்தார். இது சம்பந்தமாக, சென்னையின் டி நகர் பகுதியில் உள்ள பெரிய நிறுவனங்கள், கடைகளை அடைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ரங்கநாதன் தெரு, போதிஸ், சென்னை சில்க்ஸில் உள்ள பிரபலமான மற்றும் எப்போதும் நெரிசலான சரவணா கடைகள் மற்றும் இப்பகுதியில் உள்ள பிற ஆடை மற்றும் நகைக் கடைகளும் இதில் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நடவடிக்கையானது பொது சுகாதார நலனுக்காக மேற்கொள்ளப்படுகிறது, இந்த கடைகளில் சிலவற்றில் 1000 பேர் வேலை செய்கிறார்கள், கூடுதலாக ஏராளமான மக்கள் வருகிறார்கள். அவர்களின் நலனுக்காக இந்த நடவடிக்கை எடுத்தல் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தினசரி ஆயிரக்கணக்கானோர் நடந்து செல்லும் இதுபோன்ற கடைகள் ஒரு மாலின் பாரம்பரிய வரையறையின் கீழ் வராது என்பதை விளக்கிய கார்ப்பரேஷன் கமிஷனர், இது தொடர்பாக ஒரு குறிப்பிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அனைத்து சிறிய கடைகள், மளிகை கடைகள், பால் கடைகள், அத்தியாவசிய மருத்துவ கடைகள் மற்றும் ஹோட்டல்கள் திறந்திருக்கும் என்றும் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.
டி நகர் நகரத்தின் மிகவும் பிரபலமான ஷாப்பிங் இலக்குகளில் ஒன்றாகும். போதிஸ், ஆர்.எம்.கே.வி, சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், குமரன் சில்க்ஸ், நல்லி சில்க்ஸ் போன்ற பல ஜவுளி நிறுவனங்கள் இப்பகுதியில் வணிகக் கடைகளைக் கொண்டுள்ளன. மேலும் ஜிஆர்டி, என்ஏசி, கல்யாண் ஜுவல்லர்ஸ், ஜாய் அல்லுகாஸ் மற்றும் பல நகைக் கடைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.