காயத்ரி ரகுராம் வைத்த குற்றச்சாட்டு - வாக்குவாதத்தில் அண்ணாமலை

காயத்ரி ரகுராம் வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jan 4, 2023, 02:38 PM IST
  • காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து விலகினார்
  • அண்ணாமலை மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்
  • அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
 காயத்ரி ரகுராம் வைத்த குற்றச்சாட்டு - வாக்குவாதத்தில் அண்ணாமலை title=

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பெண் காவலரிடம் தவறாக நடந்தவர்கள் மீது உடனடியாகவ நடவடிக்கை எடுக்காதது குறித்து  முதல்வரிடம் ஏன் எந்த செய்தி நிறுவனங்களும் கேள்வி கேட்கவில்லை . கமலாலயத்திற்கு வந்தால் வந்தும் அனைவருக்கும் கேள்வி கேட்கும் துணிச்சல் வந்துவிடுகிறது. சுப்ரமணிய சாமி உட்பட கட்சிக்கு 30..40 ஆண்டுகளாக உழைத்துள்ளேன்   என்று சொல்லி கொள்வோரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அவர்களது வீட்டுக்கு சென்று நான் தேநீர் அருந்திக் கொண்டிருக்க முடியாது.  நான் நல்லவனா..? சுப்ரமணிய சாமியின் சர்டிபிகேட் எனக்கு அவசியமில்லை..இங்கு கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்கள் உட்பட அனைவரின் மீதும் 2.63 லட்சம்  தமிழக அரசின் கடன் இருக்கிறது.

ஆதார் இருக்கும்போது புதிதாக மாநில அரசு மக்கள் ஐடியை ஏன் வழங்க வேண்டும். அதனால் என்ன பயன். திமுக கனவில் கூட  தமிழ்நாட்டை தனி நாடு ஆக்க வேண்டும் என நினைத்து பார்க்க முடியாது , அதற்கான துணிச்சல் திமுகவிற்கு கிடையாது. கட்சியில் சிலர்  என்னை எதிர்ப்பது நல்லதுதான் , வளரும் கட்சி என்றால் அப்படித்தான் இருக்கும். பாஜக அடிமைக் கட்சியல்ல.. 10 ல் 2 பேர் என்னை எதிர்க்கத்தான் செய்வார்கள். அதை நான் வரவேற்கிறேன். நாங்கள் வாரிசு அரசியல் நடத்தவில்லை.

18 கோடி தொண்டர்கள்  இருக்கும் கட்சி இது , பாஜகவில் எங்கோ யாரோ ஒருவர் மகன் வேண்டுமானால் பதவிக்கு வந்திருக்க முடியும். அதை வாரிசு அரசியல் என்று கூற முடியாது .  பிரதமர் தமிழகத்தில் போட்டியிட  வேண்டும் என தமிழக பாஜக சார்பில் நாங்கள் விரும்புகின்றோம் , அது குறித்து அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் தேசிய தலைமையிடம் இருந்து வரவில்லை ” என்றார்.

இதற்கிடையே காயத்ரி ரகுராம் வைத்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது அண்ணாமலை கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன். விலகுபவர்கள் யாரும் என்னை புகழ்ந்து விட்டுச் செல்ல வேண்டும் எனக் கட்டாயம் இல்லை. என் மீது அனைவரும் தான் விமர்சனம் வைக்கிறார்கள். அதற்கான பதில் என்னுடைய மவுனம்தான்.

மேலும் படிக்க | பாஜகவிலிருந்து விலகிய சரவணன்; அதிமுகவில் இணைந்தார்

திமுக அமைச்சர் தொடர்பான ஆடியோ ஒன்று வந்தது. நீங்கள் அதை 48 மணி நேரம் கூட வெளியிடவில்லை.அவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாமா?. திமுகவிடம் கேள்வி கேட்க உங்களுக்கு தைரியம் உள்ளதா? நான் அந்த ஆடியோவை அளிக்கிறேன். நீங்கள் வெளியிடுவீர்களா? அதைவிடுத்து என்னிடம் கதை சொல்லாதீர்கள்" என்று பேசினார்.

நீங்கள் எந்த சேனல்? நீங்கள் எந்த சேனல்?" என்று கேள்வி எழுப்பினார். மேலும் கட்சி சேனல் நடத்துபவர்கள் எல்லாம் என்னிடம் பேச வேண்டாம் என்று தெரிவித்தார். இதன்பிறகு கேள்வி கேட்பவர்களிடம் சேனல் பெயர், உங்களின் பெயர் சொல்லுங்கள் என்று தெரிவித்தார். இதன் காரணமாக அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News