கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று இன்னும் முழுவதுமாக அகலாத நிலையில், அன்லாக் 4-ன் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக செயல்படத் துவங்கியுள்ளன. தமிழக சட்டசபை விரைவில் தன் செயல்பாடுகளைத் துவக்கவுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, போதுமான தனி மனித இடைவெளியை பராமரிக்க இம்முறை, சட்டசபை, கலைவாணர் அரங்கத்தில் கூடவுள்ளது.
செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்கவுள்ள தமிழக சட்டசபை (Tamil Nadu Assembly) கூட்டத்தில் பங்குகொள்வதற்கு முன்னர், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயமாக கோவிட் -19 (COVID-19) சோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அமர்வு தொடங்குவதற்கு சுமார் 72 மணி நேரத்திற்கு முன்னர், அனைத்து எம்.எல்.ஏக்களும் கட்டாயமாக COVID-19 சோதனைக்கு (COVID-19 Test) உட்படுத்தப்பட வேண்டும். உறுப்பினர்கள், நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளார்களா இல்லையா என்பது தெரிந்த பின்னரே அவர்கள் சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
ALSO READ: COVID Impact: கலைவாணர் அரங்கத்தில் உள்ள ஆடிடோரியத்தில் நடக்கும் தமிழக சட்டசபைக் கூட்டம்!!
செப்டம்பர் 11 முதல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை சோதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக சட்டப்பேரவை வெளியீடு தெரிவித்துள்ளது. மேலும், சட்டமன்ற ஊழியர்கள், மார்ஷல்கள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் சட்டமன்ற மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன் சோதனை செய்து கொண்டு தங்களுடன் "கொரோனா வைரஸ் எதிர்மறை சான்றிதழ்" வைத்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள எம்.எல்.ஏக்களின் (MLA) குடியிருப்புகளிலும், சட்டமன்ற செயலக வளாகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் சோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ.க்களைத் தவிர, "சட்டசபை செயலகத்தால் வழங்கப்பட்ட குறிப்பிட்ட அங்கீகார அட்டை உள்ளவர்கள் மட்டுமே சட்டமன்ற மண்டபத்தில் அனுமதிக்கப்படுவார்கள்."
ALSO READ: DMK பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக TR.பாலு போட்டியின்றி தேர்வு.!