Covid Updates Tamil Nadu: ஆகஸ்ட் 7 தமிழகத்தில் இன்று 1,969 பேருக்கு கொரோனா பாதிப்பு; 29 பேர் பலி

 தமிழ்நாட்டில் இன்று 1,969 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றை விட பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,73,352 ஆக அதிகரித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 7, 2021, 08:13 PM IST
Covid Updates Tamil Nadu: ஆகஸ்ட் 7 தமிழகத்தில் இன்று 1,969 பேருக்கு கொரோனா பாதிப்பு; 29 பேர் பலி title=

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,969 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றை விட பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,73,352 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 194 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று சென்னையில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. சென்னையில் இன்று பாதிப்பு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் 29 பேர் இறந்தனர். கொரோனா தொடங்கியது முதல் இன்றுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,289 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 20,286 ஆக உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 22 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,289-ஐ எட்டியுள்ளது. 

ALSO READ | தமிழகத்தில் ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 1,839 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இத்துடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 25,18,777 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மொத்தமாக 1,65,325 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 1,969 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலை ஏற்படலாம் என்ற அச்சங்களுகு மத்தியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகிறது. நேற்றை விட தமிழகத்தில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

 Also Read | செப்டம்பர் முதல் தேதியில் இருந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அரசு திட்டம்

இன்றைய நிலவரம்: 
• இன்றைய பாதிப்பு - 1,969

• இன்றைய மரணங்கள் - 29

• மொத்த பாதிப்பு - 25,73,352

• இன்றைய டிஸ்சார்ஜ் - 1,839

• இன்றைய சோதனைகள் - 1,65,325

 Also Read | Long COVID: நீண்டகால கொரோனா என்றால் என்ன? அதற்கான காரணம் தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News