இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒரேநாளில் 2,40,842 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 2,65,30,132 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 24 மணிநேரத்தில் 3,741 பேர் கொரோனாவால் பலியாகிய நிலையில் மொத்த உயிரிழப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இதற்கிடையில் தமிழகத்தில் (Tamil Nadu) இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் (Coronavirus) பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு (Lockdown) தற்போது மீண்டும் நாளை முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எந்தவித தடங்கலுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ALSO READ | பரிதாபம்! கொரோனா வைரசால் 38 கர்ப்பிணிகள் பலி
இந்த ஒரு வார கால கட்டத்தில் மருந்தகங்கள் ,நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் ,பால் விநியோகம் ,குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம் ஆகியவை தடையின்றி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த ஒரு வார காலத்திற்கு மளிகை கடை , காய்கறி கடை, இறைச்சிக்கடை ஆகியவை இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்று தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் ஒருவார காலம் ஊரடங்கு என்பதால் காய்கறிகள் விலை உச்சத்தை எட்டியுள்ளது. தக்காளி ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.50 ஆகவும், உருளை ரூ.30லிருந்து ரூ.60 ஆகவும் அதிகரித்துள்ளது. கீரை விலையும் இரண்டு மடங்காக விலை அதிகரித்துள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR