கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஊதிய உயர்வு கேட்கும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள்

கொரோனா காலத்திலும் மற்ற மாநிலங்கள் அரசு மருத்துவர்களின் சம்பளத்தை உயர்த்தி உள்ளது. ஆனால் தமிழக அரசு, இதுவரை சம்பளம் உயர்வு பற்றி பேசவில்லை.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Aug 8, 2020, 09:59 PM IST
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஊதிய உயர்வு கேட்கும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள்
Photo: PTI

சென்னை: கோவிட் -19 நோய் (COVID-19) தொடர்ந்து மனித வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ வல்லுநர்கள் (Government Medical Practitioners) அதிக ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.

தமிழக  சுகாதாரத்துறை அமைச்சருக்கு (Health Minister) 10 கேள்விகள் அடங்கிய கடிதத்தை சேவை மருத்துவர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி சங்கம் (Service Doctors and Post Graduates Association) அனுப்பி உள்ளது. 

ALSO READ |  மருத்துவர்களின் இறுதி சடங்கிற்கு எதிர்ப்பு - மனிதாபிமானமற்ற செயல்

அவர்கள் அந்த கடிதத்தில், கொரோனா தொற்றுநோய்கள் பரவி வரும் தற்போதைய சூழலிலும் மற்ற மாநிலங்கள் அரசு மருத்துவர்களின் சம்பளத்தை உயர்த்தி உள்ளது. ஆனால் தமிழக அரசு (TN Govt) , இதுவரை சம்பளம் உயர்வு பற்றி தமிழக அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை எனக் கூறியுள்ளனர்.

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று அமைச்சர் முன்பு சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

ALSO READ |  கொரோனா நோயால் 1302 மருத்துவர்கள் பாதிப்பு, 99 பேர் மரணம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் (Madras High Court) தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு போதுமான ஊதியம் வழங்கப்படவில்லை என்ற கருத்தை  எஸ்.டி.பி.ஜி.ஏ (SDPGA) நினைவுபடுத்தியது.