மத்திய அரசிடம் ஊழல் பட்டியல் இருப்பதால் தீர்மானம் நிறைவேற்ற யோசிக்கும் ADMK - ஸ்டாலின்!

அமைச்சர்களின் ஊழல் பட்டியல் மத்திய அரசிடம் இருப்பதால் தீர்மானம் நிறைவேற்ற மறுக்கின்றனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Mar 11, 2020, 12:46 PM IST
மத்திய அரசிடம் ஊழல் பட்டியல் இருப்பதால் தீர்மானம் நிறைவேற்ற யோசிக்கும் ADMK - ஸ்டாலின்! title=

அமைச்சர்களின் ஊழல் பட்டியல் மத்திய அரசிடம் இருப்பதால் தீர்மானம் நிறைவேற்ற மறுக்கின்றனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

தமிழக சட்டப் பேரவையில் NPR-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற இயலாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதால் பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. திமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

தமிழக சட்டப் பேரவையில் இன்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெற இருக்கும் நிலையில், பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் துவங்கியது. இந்நிலையில், NPR-க்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் வலியுறுத்தினார். 

தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் இவ்விவகாரம் குறித்து மு.க ஸ்டாலின் கூறுகையில்... “ பீகார் சட்டமன்றத்தில், NPR-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  பாஜக கூட்டணி கட்சிகள் கூட, NPR-க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  ஏப்ரல் 1 ஆம் தேதி பணி தொடங்கும் நிலையில், NPR-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள். NPR குறித்து மக்களிடம் அச்சம் உள்ளது” என அவர் கூறினார். 

மேலும், தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்திற்க்கு, மத்திய அரசு பதிலளித்துள்ளதா?” என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இந்தற்கு பதிலளித்த தமிழக வருவாய்துறை அமைச்சர் உதயகுமார்,  “தமிழக அரசின் கடிதத்திற்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை” என்றார்.  
மேலும், NPR-க்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற இயலாது எனவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.  இந்நிலையில், தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. இதை தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்.... அமைச்சர்களின் ஊழல் பட்டியல் மத்திய அரசிடம் இருப்பதால், NPR-க்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு மாறுபாடாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

Trending News