Tamil Nadu Lockdown News: இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூரில் முழு ஊரடங்கு

கோயம்புத்தூரில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை (ஜூலை 27) காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 24, 2020, 10:39 PM IST
Tamil Nadu Lockdown News: இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூரில் முழு ஊரடங்கு title=

Coimbatore Lockdown News: ஜூலை மாதத்தின் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று இந்த மாத தொடக்கத்தில் அறிவித்த தமிழக அரசு, இன்று (வெள்ளிக்கிழமை) கோயம்புத்தூர் (Coimbatore) மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு விதி கடுமையாக கடைபிடிக்கப்படும். கோயம்புத்தூரில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை (ஜூலை 27) காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்தது.

கோயம்புத்தூரில் (Coimbatore Corona cases) கொரோனா வைரஸ் தொற்றின் மொத்த எண்ணிக்கை 2,966 ஆக உயர்ந்துள்ளது. அதில் இன்று மட்டும் 186 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல கோவை மாவட்டத்தில் கொரோனா காரணமாக இதுவரை நான்கு பேர் இறந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, மாவட்டத்தில் ஊரடங்கு (Lockdown) ஜூலை 25 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி ஜூலை 27 திங்கள் காலை 6 மணிக்கு முடிவடையும்.

ALSO READ |  லாக்டவுனால் எந்த பயனும் இல்லை... நாளை முதல் இயல்பு நிலை..!!

இந்த மாதத்திற்கான நான்காவது மற்றும் இறுதி ஞாயிற்றுக்கிழமை (Sunday Lockdown) ஊரடங்கில், பால், மருந்துகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதேபோல காய்கறி சந்தைகள், மளிகை கடைகள், மீன் சந்தைகள், மலர் சந்தைகள், இறைச்சி கடைகள், மதுபான கடைகள் போன்றவை அனுமதிக்கப்படாது.

நாட்டில் குறிப்பிடத்தக்க வகையில், அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் தமிழகம் (Tamil Nadu) திகழ்கிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மாநிலத்தில் 6,785 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3320 ஆக உயர்ந்துள்ளது. அதாவது மாநிலத்தில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,21,389 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 78,337 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 

ALSO READ |  Tamil Nadu Lockdown: ஜூலை 31 வரை அரசு மற்றும் தனியார் பஸ் சேவைகள் இயங்காது

Trending News