திட்டம் போட்டே போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர் - ஜெயக்குமார்.!

TNPSC-யின் முறைகேடு செய்ததற்காக திமுக சிறை செல்ல வேண்டிய நிலை வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பதிலளித்துள்ளார்!

Updated: Feb 17, 2020, 04:12 PM IST
திட்டம் போட்டே போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர் - ஜெயக்குமார்.!

TNPSC-யின் முறைகேடு செய்ததற்காக திமுக சிறை செல்ல வேண்டிய நிலை வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பதிலளித்துள்ளார்!

டி.என்.பி.எஸ்.சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-4, குரூப்-2 ஏ உள்ளிட்டத் தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக CBCID காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த முறைகேடு சம்பவம் தொடர்பாக இடைதரகராக செயல்பட்ட ஜெயக்குமார் உள்ளிட்டவர்களைக் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இந்தநிலையில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக எதிர்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்ட்டது.

அதற்கு பதிலளித்த சீருடைப் பணியாளர்துறை அமைச்சர் ஜெயகுமார், ‘TNPSC-யில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை மேற்கொண்டு முறைகேட்டுக்கு துணையாக இருந்த டி.என்.பி.எஸ்.சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேர்மையாக தேர்வு எழுதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதற்காக தேர்வை ரத்து செய்யவில்லை. TNPSC-யில் முறைகேடு செய்ததற்காக தி.மு.கவினர் சிறை செல்லவேண்டிய நிலை வரும்’என்று காட்டமாக பதிலளித்தார். இதை தொடர்ந்து, வண்ணாரப்பேட்டையில் தி.மு.க. கூட்டத்துக்கு பிறகே கலவரம் தொடங்கியது. அந்த கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் லியோனி கலவரத்தை தூண்டிவிடும் வகையில் பேசியதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.