TN TRB Result 2022: முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் அவுட்

TRB Result 2022: தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வுக்கான முடிவுகளை இன்று வெளியிட்டது. தங்கள் தேர்வு முடிவுகளை trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் இதனை அறிந்துகொள்ளலாம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 4, 2022, 09:17 PM IST
TN TRB Result 2022: முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் அவுட் title=

Teachers Recruitment Board Result 2022: கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர், கணினி பயிற்றுநர் நிலை 1, உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட போட்டித் தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதிலிருந்து 2,13,893 பேர் எழுதியிருந்தனர். தேர்வு எழுதிய அனைவரும் தங்கள் தேர்வு முடிவுகளை trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் இதனை அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெற்றது.  2200-க்கும் மேற்பட்ட  காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

TN TRB PG Assistant 2022 தேர்வு முடிவை பதிவிறக்குவது எப்படி?

- விண்ணப்பதாரர்கள் முதலில் TN TRB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

- பின்னர் TN TRB முதுகலை உதவியாளர்கள்/ உடற்கல்வி இயக்குநர்கள் கிரேடு-I/ கணினி பயிற்றுனர் தரம் I முடிவு 2022க்கான இணைப்பைத் தேடவும்.

- அதன் பிறகு இணைப்பைக் கிளிக் செய்யவும்.

- உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.

- இப்போது உங்கள் User ID and password தகவலை நிரப்பவும்.

- பின்னர் சமர்ப்பி பொத்தானை அழுத்த வேண்டும்.

- உங்கள் முன்பு கணினித் திரையில் TN TRB PG Assistant தேர்வு முடிவு 20222 காட்டப்படும்.

- தேர்வு முடிவை மதிப்பாய்வு செய்து, பின்னர் பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.

மேலும் தகவலுக்கு http://trb.tn.nic.in/pg2021/04072022/msg.htm என்ற லிங்கை கிளிக் செய்து அனைத்து விவரங்களையும் அறிந்துக்கொள்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News