உக்ரைனில் படித்து வரும் தனது மகன் மற்றும் அங்கு சிக்கித் தவிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்கும் படி தமிழகத்தை சேர்ந்த பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேனி: தேனியில் வசிக்கும் சரவணன் என்பவரின் மகன் ரோகித் குமார் உக்ரைன் நாட்டில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
சில தினங்களாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கு்ம் இடையில் பதட்டம் நிலவி வந்த சூழலில் மகனை இந்தியாவுக்கு அழைத்து வர சரவணன் முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்தியாவுக்கு திரும்பி வர மார்ச் எட்டாம் தேதி விமான டிக்கெடடும் எடுக்கப்பட்டது. ஆனால், நேற்று ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல்களை தொடங்கிவிட்டது.
மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் மோதல்: இந்தியாவின் கவலைகளுக்கான காரணங்கள்
நேற்று அதிகாலையிலேயே தந்தை சரவணனை தொலைபேசியில் அழைத்த மாணவன் ரோகித் குமார், அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள இடங்களில் ரஷ்யா குண்டுகளை வீசி வருவதாக தெரிவித்துள்ளார். வெடி குண்டு விழுந்ததால் ஏற்பட்ட அதிர்வினால், உறங்கிக் கொண்டிருந்த தாங்கள் எழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மகனை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்திய பெற்றோர், மகனின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகின்றனர்.
உக்ரைனில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கி உள்ளார்கள். எங்கள் மகன் ரோஹித் மட்டுமல்ல, அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் அனைவரையும், மத்திய மாநில அரசுகள் பத்திரமாக மீட்க வேண்டும் என மாணவர் ரோகித் குமாரின் தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்
மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR