Fishermen: இந்திய மீனவர்களை இலங்கை எப்போது திருப்பி அனுப்பும்???

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எப்போது இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற காத்திருப்பு தொடர்கிறது...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 23, 2021, 07:30 AM IST
  • தமிழக மீனவர்கள் தாயகம் திரும்புவது எப்போது?
  • 4 நாட்களாக தொடரும் காத்திருப்பு
  • மீனவர்களை இலங்கை எப்போது அனுப்பும்?
Fishermen: இந்திய மீனவர்களை இலங்கை எப்போது திருப்பி அனுப்பும்??? title=

சென்னை: தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எப்போது இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற காத்திருப்பு தொடர்கிறது. நான்கு நாட்கள் ஆன பிறகும் கைது செய்யப்பட்ட 2 இந்திய மீனவர்கள் மற்றும் உயிரிழந்த ஒரு மீனவரின் சடலத்திற்கான காத்திருப்பு, கவலைகளுடன் தொடர்கிறது.
 
தமிழகத்தின் கோட்டைப்பட்டினம் மீன்பிடி கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜ்கிரண், சேவியர், சுகந்திரன் ஆகியோர் நான்கு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிப்பதற்காக படகில் கிளம்பினார்கள். அவர்கள் பயணம் செய்த மீன்பிடி படகு, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளநெடுந்தீவுக்கு அருகில் (Delft island) படகு "மோதி" நீரில் மூழ்கியதாக இலங்கை கடற்படை தெரிவித்தது. சேவியர் மற்றும் சுகந்திரன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர், ராஜ்கிரண் என்ற மீனவர் உயிரிழந்தார்.  

இது விபத்தல்ல, இலங்கை கடற்படையினர் வேண்டுமென்றே செய்யும் அடாவடி மோதல் என்று கூறி, தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Also Read | லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்ட்; AIADMK இளங்கோவன் மீது வழக்குப் பதிவு

”இலங்கைப் படையினரால் வேண்டுமென்றே படகு கவிழ்த்தது, இது எதிர்பாராமல் நடைபெற்ற சம்பவம் அல்ல. இலங்கை கடற்படையில் ரேடார்கள் உள்ளன அதனால் இது போன்ற ஒரு மோதல் சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லை, அவர்கள் தமிழக மீனவர்களின் படகை துரத்தினார்கள். எனவே இதற்கு இலங்கைதான் பொறுப்பு” என சம்பவம் நேரிட்ட சமயத்தில், விபத்தில் கவிழ்ந்து மூழ்கியதாக கூறப்படும் படகுக்கு அருகில் இருந்த மற்றொரு படகில் பயணம் செய்ததாகக் கூறப்படும் மீனவர் பிரபாகரன் கூறுகிறார்.

இந்த மோதல் சம்பவம், இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த ஒரு சம்பவத்துடன் முற்றிலும் ஒத்திருக்கிறது என்று மீனவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அப்போது, இலங்கை கடற்படை படகின் மீது இந்திய மீன்பிடி படகு மோதியதாகக் கூறப்பட்டது, அதன் நான்கு பணியாளர்கள் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதில் உயிரிழந்தனர். 

தற்போது, புதன்கிழமை பிற்பகலிலேயே தமிழக மீனவர்கள் வந்து சேர்வார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான காத்திருப்பு தொடர்கிறது. 

Also Read | அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

"இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் செயலற்ற தன்மை" என்று இந்திய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு பிரதிநிதிகள் வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மீனவர்களின் கவலைகளை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்தார்.  ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்று மீனவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கூறிய இலங்கை கடற்படை, "இந்திய மீனவர்கள் திங்களன்று சர்வதேச கடல் எல்லைக் கோடு (International Maritime Boundary Line(IMBL)) பகுதியைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தார்கள்" என்று கூறியுள்ளது. இந்திய மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் துரத்திச் சென்ற போது இந்த மோதல் இடம்பெற்றதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். "இந்திய மீன்பிடி விசைப்படகு ஒன்று, ஆக்கிரமிப்பு செய்ய முயன்றபோது, அவற்றை விரட்டியடிக்கும் முயற்சியில் படகு மோதி நீரில் கவிழ்ந்தது, கடல் சீற்றம் காரணமாக இந்த மோதல் நிகழ்ந்தது”என்று இலங்கை கடற்படை கூறுகிறது.  

ஆனால் மீனவர்கள் இலங்கையில் இருந்து எப்போது திரும்புவார்கள் என்பதற்கான காத்திருப்பு எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.

Also Read | அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News