அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை மற்றும் சேலத்தில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை. காலை 6 மணி முதல் சோதனைகள் தொடர்கின்றன

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 22, 2021, 09:08 AM IST
  • முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை
  • லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
  • சேலத்திலும் சோதனை தொடர்கிறது
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை 6 மணியில் இருந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் லஞ்சம் பெற்றதாக கூறி, அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. 

சென்னை ஆயிர்ம் விளக்குப் பகுதியில் உள்ள சாசன் டெவலப்பர்ஸ் நிறுவனத்திலும், அண்ணா நகர் மேற்கில் உள்ள விஜய பாஸ்கரின் முன்னாள் உதவியாளர் வீட்டிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், விஜய பாஸ்கரின் உதவியாளரின் நந்தனம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி தொடர்பானவர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கத் தலைவர் இளங்கோவன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் மட்டும் 30 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.  

ALSO READ | அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் ரெய்டு

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர் என்று அறியப்படும் இளங்கோவன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொள்ளப்படுள்ளது.  

வருமானத்துக்கு அதிகமாக 3.78 கோடி சொத்து சேர்த்ததாக இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்மா (ஜெயலலிதா) பேரவையின் புறநகர் மாவட்ட செயலாளராகவும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தலைவராகவும் இருப்பவர் சேலம் இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.  

தமிழகத்தின் அரசு ஒப்பந்தாரரும் முக்கிய கட்டுமான நிறுவனங்கள் நடத்திவரும் தொழிலதிபர் பிஎஸ்டி தென்னரசுவின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல், சென்னையில் உள்ள வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்டுள்ள சோதனைகள், மேலும் பல விஷயங்களை தெளிவுபடுத்தலாம், மற்றும் பல பண மோசடி விவகாரங்களை வெளிப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News