'நாங்க ஆட்சிக்கு வந்தா... தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்கிவிடுவோம்' கொந்தளித்த சீமான் - காரணம் என்ன?

Tamil Nadu News: நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு தூக்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இதுகுறித்து அவர் பேசியவற்றை இங்கு முழுமையாக காணலாம். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sudharsan G | Last Updated : Oct 20, 2024, 08:37 AM IST
  • தமிழ் மொழி உயிரற்ற நிலையில் இருப்பதற்கு திமுகவுக்கு கோபம் வரவில்லை - சீமான்
  • தீபாவளிக்கு தற்காலிகமாக 1500 மதுகடைகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது - சீமான்
  • நடிகர் விஜய் தன்னை எதிர்த்து வேலை செய்தாலும் அவரை ஆதரிப்பேன் - சீமான்
'நாங்க ஆட்சிக்கு வந்தா... தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்கிவிடுவோம்' கொந்தளித்த சீமான் - காரணம் என்ன? title=

Tamil Nadu News Latest Updates: ஈரோட்டில் தமிழக பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் சார்பில் நடத்தப்படும் தமிழ் பண்பாட்டு கண்காட்சியை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார். மேலும், இந்த கண்காட்சியில் தமிழர்கள் வரலாறு குறித்து வைக்கப்பட்ட வரலாற்று தகவல்களையும் மண் சார்ந்த பொருட்களையும் சீமான் பார்வையிட்டார். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'திராவிட நல் திருநாடு' என்று வார்த்தை நீக்கியதாக சொல்லுபவர்கள். ஆரியம் வழக்கொழிந்து உட்பட வார்த்தைகளை தூக்கியது யாரு... திராவிட என்ற சொல்லை எடுத்ததற்கு இவ்வளவு கொதிக்கும் இவர்கள், 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியை உயிரற்ற நிலையில் இருப்பதற்கு கோபம் வரவில்லை. 

'திராவிடர்கள் உள்ளே வந்துவிட்டார்கள்'

நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு தூக்கப்படும், அதற்கு என்ன செய்வார்கள். வரலாற்றில் ஆரியம் கண்டாய் தமிழன் கண்டாய் என்று உள்ளது திராவிடத்தை வேண்டுமென நுழைத்து விட்டு 3 சதவீதம் உள்ள பிராமணர்கள் வைத்து 30 சதவீத திராவிடர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். மாநில தன்னாட்சி பேசி வந்த நிலையில் கல்வி, மொழி, வரி, மருத்துவம் போன்ற அனைத்து உரிமைகளை பறிக்கொடுத்துவிட்டு மாநில உரிமைகளை பற்றி பேசுவது என நியாயம்...?

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை பணம் உங்களுக்கு வரவில்லையா? அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்

நாம் தமிழர் தமிழ் தேசியம் என்றால் என்ன என்று விளக்குவதை போன்று, திராவிடம் என்றால் என்ன வென்று அவர்களால் சொல்ல முடியுமா... கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நாகரிகம் தமிழகத்தின் நாகரிகம் என்றுதான் சொல்கிறது. ஆனால் இங்கு ஆட்சியில் உள்ளவர்கள் திராவிட நாகரிகம் என்று சொல்கிறார்கள். ஆளுநர் மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் நாங்கள் கொந்தளித்தால் தான் மாற்றினார்கள் என்று சொல்வதற்குதான் ஆளுநர் விவகாரத்தை பேசி வருகிறார்கள்.

1500 மதுகடைகள் திறக்க திட்டம்

தீபாவளிக்கு தற்காலிகமாக 1500 மதுகடைகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதனை கவனத்தில் கொள்ளாத வகையில் தொலைக்காட்சி திசைதிருப்ப திராவிடம் விடப்பட்டது பெரிதாகப்பட்டுள்ளது. இந்தியை எதிர்க்க அருகதை தகுதி திமுகவுக்கு இல்லை. திமுகவினர் நடத்தும் பள்ளியில் இந்தி 2ஆவது மொழியாக உள்ளது, இந்தியை எந்த எதிர்ப்பும்  இல்லாமல் தமிழகத்தில் நுழையவிட்டது திராவிட ஆட்சிகள்தான்.

இந்தியை திணித்த காங்கிரஸ் கட்சி உடன் அரசியல் லாபத்திற்காக கூட்டணி வைத்ததால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் இந்தி தமிழகத்தில் வந்துவிட்டது. இப்போது வட மாநிலத்தவர்கள் ஒன்றைக் கோடி பேர் தமிழ்நாட்டில் உள்ளார்கள். தமிழ்த்தாய் பாடலில் உடன்பாடு இல்லை, நான் ஆட்சி அதிகாரத்தில் வந்ததால் திறமையான பாவலர்களை வைத்து நல்ல பாடல்களை எழுதுவேன்.

'விஜயை தொடர்ந்து ஆதரிப்பேன்'

கவிஞர் வைரமுத்துக்கு பதில் காலம்காலமாக ஏமாற்றி செல்லும் இந்த திராவிட ஆட்சியை கண்ணும் காது இருப்பவர்கள் யாரும் அவ்வளவு விரைவாக கடந்து செல்ல மாட்டார்கள். முருகன் மாநாடு போட்டது யாரு, பூஜை அறையில் துர்கா ஸ்டாலின் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வது யார், அத்திவரதரை குடும்பத்துடன் கும்பிட்டது யாரு, பதவி ஏற்பு போது நேரம் நட்சத்திரம் பார்த்து யாரு, தமிழகத்தில் எப்போதே அரசியல் ஆன்மிக கலந்துவிட்டது.

சென்னையில் மொத்தமாக 2500 கோடி ரூபாய்தான் மழைநீர் வடிகால் கட்டமைப்பு உருவாக்க தேவைப்படும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்கள். யானை என்ன ஒரு கட்சிக்கு மட்டும்தான் சொந்தமா, இதையெல்லாம் விஜய் கண்டுக்கொள்ள மாட்டார். 5 நாட்களில் நீக்கவில்லை என்றால் சட்டம் நீக்கிவிடுவமா?. தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளதான் புகழ்பெற்ற விஜயை இடையூறு செய்து வருகிறார்கள்.

நடிகர் விஜய் தன்னை எதிர்த்து வேலை செய்தாலும் அவரை ஆதரிப்பேன். ஏன் என்றால் அவர் என்னுடைய தம்பி. சேலத்தில் திமுக மாநாடு நடத்தும்போது கட்டுப்பாடு விதிக்கவில்லை. ஆனால் விஜய் நடத்தினால் இவ்வளவு இடையூறு செய்வது ஏன்...?. நடிகர் கமல்ஹாசனின் சிறுவயதில் இருந்தே அவரது ரசிகர் என்பதால் நட்பு பாராட்டினேன். அவரது கொள்கை அவரது முடிவு என்பதால் திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். கோபி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி என்பவர் போட்டியிடுவார். பரந்தூர் விமான நிலையம் ஒருபோதும் கட்ட முடியாது" என்றார். 

மேலும் படிக்க | கிசுகிசு : 'சீமானிடம் தள்ளியே இருங்க' விஜய்க்கு அட்வைஸ் செய்த முன்னாள் நாதக புள்ளி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News