கடன் தள்ளுபடி என்று கூறாமல், அனைத்து விவசாயிகளுக்கும் பாஜக அரசு நன்மை செய்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரவித்துள்ளார்!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு உதுவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இத்திட்டத்திற்கு தமிழக அரசு தொடரந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், பிரதமர் மோடியை விமர்சனம் செய்யும் நிலை, தமிழக அரசியல் கட்சியினரிடையே நிலவுகிறது. பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார்.
மேலும், 2019 ஆம் ஆண்டுக்கான தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளோம். ஜனவரி மாதத்தில் அனைத்து வாக்குச்சாவடி முகவர்களோடும் பிரதமர் மோடி உரையாட உள்ளார். கடன் தள்ளுபடி என்று கூறாமல், அனைத்து விவசாயிகளுக்கும் பாஜக அரசு நன்மை செய்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என திருநாவுக்கரசர், ஸ்டாலினை அழைத்து குமாரசாமி கூறட்டும். மேகதாது அணை விவகாரத்தில் பாஜக தெளிவாக உள்ளது.
இதை தொடர்ந்து மேலும், அவர் பேசுகையில், கூட்டணியில் இருக்கும் யாரை வேண்டுமானால்லும் சிலை திறப்பு விழாவுக்கு மு.க.ஸ்டாலின் அழைக்கலாம் என தெரிவித்தார்.