மதுரையில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது - தேர்தல் ஆணையம் உறுதி!

 

Last Updated : Mar 14, 2019, 04:19 PM IST
மதுரையில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது - தேர்தல் ஆணையம் உறுதி! title=

 

சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரையில் பாராளுமன்ற தேர்தல் தேதியை ஒத்தி வைக்க இயலாது என தேர்தல் ஆணையம் உறுதிப்பட தெரிவித்துள்ளது!

மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பைன தலைமை தேர்தல் அதிகாரி சுனில் ஆரோரா கடந்த மார்ச் 10-ஆம் நாள் அறிவித்தார். அதன் படி இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதி, ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6 ஆம் தேதி, ஆறாம் கட்ட தேர்தல் மே 12 ஆம் தேதி, ஏழாம் கட்ட தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.  

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலோடு காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுகளுக்கும் தேரத்ல நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் குறிப்பிட்ட இந்த தினத்தில் மதுரையில் பிரசிதிப்பெற்ற சித்திரை தேர் திருவிழா நடைபெறுகிறது. சித்திரை திருவிழா நடைபெறும் தினம் அன்று தேர்தல் நடத்தப்பட்டால் வாக்குப்பதிவு பாதிக்கும் எனவும், மதுரையில் வாக்குப்பதிவு தேதியினை மாற்ற வேண்டும் எனவும் மதுரை மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். விழா பற்றி தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கனவே தெரியப்படுத்தினீர்களா? எனவும் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி பதிலளிக்க, சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டார்.

இதற்கிடையில் மதுரையில் மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றக்கிளையில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் பார்த்தசாரதி முறையீட்ட இந்த மனுவில் சித்திரை திருவிழாவை ஒட்டி மதுரையில் தேர்தலை ஒத்திவைக்கக்கோரி குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது, தேர்தல் ஆணைய வழக்கறிஞர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை பாராளுமன்ற தேர்தலை தள்ளிவைக்க முடியாது. கோயிலை சுற்றியுள்ள 18 வாக்குச்சாவடிகளை பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கவும், வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. துணை ராணுவ படையுடன் தேர்தல் நடத்த முடியும் என தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், வெறும் கடமைக்காக தேர்தலை நடத்த வேண்டாம். வாக்காளர்களை பற்றியும் சிந்திக்க வேண்டும். 100%  வாக்குப்பதிவு பெற வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையத்துக்கு அக்கறை இல்லையா?

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். 

Trending News