COVID-19 முழு அடைப்பால் தமிழகம் சுமார் ரூ.35,000 கோடி இழப்பை சந்தித்துள்ளது...

COVID-19 காரணமாக தூண்டப்பட்ட முழு அடைப்பால் மாநிலம் சுமார் ரூ.35,000 கோடி வரி வருவாயை இழந்திருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Last Updated : May 24, 2020, 11:39 AM IST
COVID-19 முழு அடைப்பால் தமிழகம் சுமார் ரூ.35,000 கோடி இழப்பை சந்தித்துள்ளது... title=

COVID-19 காரணமாக தூண்டப்பட்ட முழு அடைப்பால் மாநிலம் சுமார் ரூ.35,000 கோடி வரி வருவாயை இழந்திருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு குறித்து சேலத்தில் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் நடைப்பெற்ற இரண்டு நாள் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முதல்வர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

செய்தியாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்ததாவது., நிதித்துறை சுமார் 35,000 கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பை மதிப்பிட்டுள்ளது, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மற்றும் கடந்த ஏழு நாட்களாக மார்ச் மாதத்தில், GST (சரக்கு மற்றும் சேவை வரி) மாநிலத்தின் பங்கை குறைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

மாநில அரசு தவணைகளில் பெற்றுக்கொண்ட சில நிதியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தாலும், அது மாநில அரசு கேட்ட அளவிற்கு இல்லை என்றும் அவர் கூறினார். முன்னதாக GST-யில் மாநிலத்தின் பங்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது என்றும் அவர் கூறினார்.

வேலைவாய்ப்பு உருவாக்கம் அப்படியே இருக்க மாநில அரசு தேவையான அனைத்து வளர்ச்சி நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் பழனிசாமி குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள அனைத்து சிக்கன நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருவதாகவும், இது மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை பாதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

பொது வேண்டுகோளின் அடிப்படையில் ஜூன் 15-ஆம் தேதி மாநிலத்தில் 10-ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மே 31-க்குப் பிறகு பூட்டுதல் தளர்த்தல்கள் குறித்து பேசிய அவர், இது மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் அமையும் என்று தெரிவித்தார். மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் அவர் குறிப்பிட்டார்.

COVID-19 -ன் பரவலை சமாளிக்க அரசு தவறிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் MK ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரித்த முதலமைச்சர், நாட்டில் அதிக எண்ணிக்கையிலான சோதனை வசதிகளை தமிழ்நாடு கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் 66 சோதனை ஆய்வகங்கள் உள்ளன, இதில் 41 அரசு மற்றும் 27 தனியார் மையங்கள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு நாளில் சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கையிலும் மாநிலம் முன்னிலை வகிக்கிறது. மே 23 அன்று, இந்த எண்ணிக்கை 12,155-ஆக இருந்தது, இதுவரை 3,97,340 மாதிரிகளை அரசு சோதனை செய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Trending News