தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வுகள் மூன்று முக்கிய பாடங்களுக்கு மட்டுமே நடத்தப்படும்...

கொரோனா முழு அடைப்பு காரணமாக கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய மூன்று முக்கிய பாடங்களுக்கு மட்டுமே SSLC தேர்வுகளை வெட்டுவதற்கான விருப்பத்தை மாநில அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated: Apr 29, 2020, 08:10 AM IST
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வுகள் மூன்று முக்கிய பாடங்களுக்கு மட்டுமே நடத்தப்படும்...
Representational Image

கொரோனா முழு அடைப்பு காரணமாக கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய மூன்று முக்கிய பாடங்களுக்கு மட்டுமே SSLC தேர்வுகளை வெட்டுவதற்கான விருப்பத்தை மாநில அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சூழ்நிலையில், அனைத்து மாணவர்களும் மொழித் தாள்களில் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அசல் அட்டவணையின்படி, 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகள் மார்ச் 27 முதல் ஏப்ரல் 13 வரை நடத்தப்பட இருந்தன. இருப்பினும், மாநிலத்தில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அடுத்தடுத்து அதிகரிக்க, தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.

இதனிடையே 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு All-Pass அறிவித்தது போல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வினை ரத்து செய்யும் படி கல்வியாளர்கள், பெற்றோர்கள் பள்ளி கல்வித் துறையிடம் கேட்டுக் கொண்டனர். எனினும் இந்த கோரிக்கையினை அமைச்சர் செங்கோட்டையன் நிராகரித்தார். உயர்நிலை மட்டத்தில் பல்வேறு படிப்புகளை எடுக்கும்போது SSLC-ல் மாணவர்கள் மதிப்பெண் முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தினார்.

"இருப்பினும், 10-ஆம் வகுப்பு தேர்வுகளில் முடிவெடுக்க பெற்றோரிடமிருந்து கூட அழுத்தம் அதிகரித்து வருவதால், மொழி பாடங்களை தவரித்து முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்துவது பற்றி ஒரு விவாதம் நடந்து வருகிறது,” என்று பள்ளி கல்வி இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.

பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு பாடங்களில் பெறப்பட்ட மதிப்பெண்கள் முக்கியம் என்பதைக் குறிப்பிட்டு, “மூன்று பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டால், மொழி பாடங்களுக்கான அல்பாஸை அரசாங்கம் அறிவிக்கும்” என்றார். வினாத்தாள்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு பாதுகாப்பான அறைகளில் தயாராக வைக்கப்பட்டுள்ளதால், நான்கு முதல் ஆறு நாட்களுக்குள் தேர்வுகளை ஏற்பாடு செய்வது கடினம் அல்ல என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

"முழு அடைப்பு நீக்கப்பட்டவுடன், 10-ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்படலாம் எனவும், இது ஒரு குறுகிய பதிப்பாக இருந்தாலும் அல்லது அனைத்து பாடங்களுக்கும் இருந்தாலும் சரி, பொருத்தமான முடிவை எடுக்க அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும்," என்றும் அவர் கூறினார். 11-ஆம் வகுப்புக்கான மீதமுள்ள தேர்வுகளும் அதனுடன் நடத்தப்படும் என்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.