’தமிழ்நாடு’ இணையத்தில் பறக்கும் பதிவுகள்! ஆளுநர் ரவிக்கு கடும் கண்டனம்

’தமிழ்நாடு’ என்ற ஹேஷ்டேக் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் முன்னணியில் உள்ளது. அந்த பதிவுகளில் ஆளுநர் ரவிக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 6, 2023, 12:49 PM IST
’தமிழ்நாடு’ இணையத்தில் பறக்கும் பதிவுகள்! ஆளுநர் ரவிக்கு கடும் கண்டனம் title=

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என அழைப்பதை விடுத்து தமிழகம் என அழைப்பது சரியாக இருக்கும் என தெரிவித்திருக்கும் கருத்து பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் பேசிய அவர், இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு கட்சி மாறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பினரும் ஓரணியில் நின்று கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ஜல்லிக்கட்டை ஒத்தி வைத்த தச்சங்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் பாதுகாப்பு கறார்

திமுக தரப்பில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு விடுத்திருக்கும் அறிக்கையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக பாஜக தலைவர் போல் செயல்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பிரிவினையை தூண்டும் வகையில் சர்ச்சைக் கருத்துக்களை பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல், திக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கடும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். 

டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து #தமிழ்நாடு என்ற ஹேஸ்டேக் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அறிஞர் அண்ணா, சென்னைக்கு தமிழ்நாடு என பெயர்ச்சூட்டி தீர்மானம் நிறைவேற்றினார்.

இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்ட பெயர்சூட்டப்பட்டது. இதன் வரலாறு குறித்தும், தமிழ்நாட்டின் அரசியல் பின்னணி குறித்தும் எடுத்துரைத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நெட்டிசன்கள் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர். 

மேலும் படிக்க | ’உணர்ச்சிகளின் அடிப்படையில் தீர்ப்பு எழுதப்படாது’ கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதிமன்றம் கருத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News