நான் விஜய்யின் தீவிர ரசிகர்: லப்பர் பந்து ஹீரோ ஹரிஷ் கல்யாண்!

லப்பர் பந்து படம் பார்த்த பிறகு சிவகார்த்திகேயன், சிம்பு, கார்த்தி உள்ளிட்டோர் வாழ்த்து கூறினர். கண்டிப்பாக இன்னும் ஒரு படம் ஹரிஷ் கல்யாணை கதாநாயகனாக வைத்து ஒரு படம் எடுப்பேன் என்று லப்பர் பந்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேச்சு.  

Written by - RK Spark | Last Updated : Sep 29, 2024, 01:54 PM IST
  • படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
  • என்றும் கொத்தனாரின் மகன் என்பதே என் அடையாளம்.
  • லப்பர் பந்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேச்சு.
நான் விஜய்யின் தீவிர ரசிகர்: லப்பர் பந்து ஹீரோ ஹரிஷ் கல்யாண்! title=

சமீபத்தில் வெளியான  தமிழகம் முழுவதும் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், தினேஷ் நடித்த லப்பர் பந்து திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கு நன்றி கூறும் விதமாக படக்குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள தனியார் திரையரங்கில் படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து மற்றும் படத்தின் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்த மகிழ்ந்தனர். தொடர்ந்து படத்தின் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் மற்றும் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். 

மேலும் படிக்க | Vaazhai OTT : வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்!! எப்போது? எந்த தளத்தில் பார்ப்பது?

நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசுகையில், மதுரை மக்களுக்கு பெரிய நன்றிகள் லப்பர் பந்து திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. எதிர்பார்த்ததை விட பெரிய அன்பும் பேராதர்வம் கிடைத்து வருகிறது. சினிமா ரசிகர்களுக்கும், மக்களுக்கும் மிக்க நன்றி. மதுரை வந்ததற்கு கூடுதல் காரணம், எந்த படமாக இருந்தாலும் அதன் வெற்றியை முடிவு செய்வதில் மதுரை முக்கிய தளமாக இருக்கிறது. தற்போது இந்த படம் மதுரையிலும் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து மதுரை மக்களை சந்திக்கவே இங்கு வந்தோம். தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது அனைவரும் திரையரங்கில் படத்தை மகிழ்ச்சியுடன் பார்க்கிறார்கள். படத்தின் கதையை தேர்வு செய்வதில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதே என்று ஹரிஷ் கல்யாணிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நல்ல இயக்குனர்கள் நல்ல கதையுடன் வருகிறார்கள் அவர்களை தவற விட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் பார்க்கிங், லப்பர் பந்து போன்ற படத்தை தேர்வு செய்தேன். 

முன்னதாக நடித்த படத்திலிருந்து மாறுபட்டு நடிக்க வேண்டும். ரசிகர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தை தேர்வு செய்து வருகிறேன். லப்பர் பந்து படத்தின் வாழ்வியலும் கதைக்களமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நோக்கத்தோடு தான் இந்த படத்தை தேர்வு செய்தேன். மேலும் கிரிக்கெட், கிராமம் சார்ந்த கதைக்களம் என அனைத்தும் இருந்ததால் லப்பர் பந்து படத்தை தேர்வு செய்தேன். தொடர்ந்து, அஜித் பிடிக்குமா விஜய் பிடிக்குமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, நான் தீவிர விஜய் ரசிகர் இருப்பினும் எனக்கு அஜித் சார் மிகப் பிடிக்கும், இதில் பாகுபாடு எதுவும் இல்லை என குறிப்பிட்டார்.  

தொடர்ந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேசுகையில், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் மீடியா அனைவர்களுக்கும் நன்றி. ஐயப்பன் கோஷியும், டிரைவிங் லைசன்ஸ் போன்று ஈகோ சென்ட்ரிக் படமாக இதுவும் அமைந்துள்ளது உங்களுக்கு அந்த படங்கள் பிடிக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, எனக்கு ஐயப்பன் கோசியும் மிகப் பிடிக்கும். அந்த கதையை ஐடியாவாக வைத்து இந்த மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று எண்ணினேன்,  என்னிடம் கிரிக்கெட்தான் இருந்தது. எனவே கிரிக்கெட்டை மையமாக வைத்து அதே போன்று ஒரு படம் எடுத்தேன். கிரிக்கெட் விளையாடாதவர்கள் இந்தியாவில் யாராவது இருக்கிறார்களா என கூறினார்.

தொடர்ந்து, நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் வலைதளத்தில் டவுன்லோட் செய்து பார்ப்பவர்கள் அவர்களாக மாற வேண்டும். எங்களின் உழைப்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலர் இன்னும் வலைதளத்தில் பதிவு செய்து பார்ப்பது வருத்தம் அளிக்கிறது. சாதியை தழுவியும் கதைக்களம் உள்ளதே என்று கேட்ட கேள்விக்கு, மாரி செல்வராஜ் போன்ற நபர்கள் அளவு ஜாதி ரீதியான பிரச்சினைகளை நான் சந்தித்ததில்லை. எனக்கு தெரியாத ஒரு விஷயத்தை இதுதான் சரி என்று என்னால் எடுக்க முடியாது, அவர்கள் அரசியல் நிலவரம் ரீதியாகவும் அனுபவம் ரீதியாகவும் வலுவாக இருப்பதால் அப்படி திரைப்படம் எடுக்கிறார்கள். நான் அரசியல் ரீதியாக அவ்வளவு அழுத்தமாக அனுபவித்ததில்லை. மேலும் கதைக்கு இவ்வளவு தான் தேவைப்பட்டது. சாதி என்பது அனைத்து ஊரிலும் உள்ளது எனவே அதை தழுவி எடுத்துள்ளேன் என கூறினார். 

மேலும் லப்பர் பந்து நாங்கள் எதிர்பார்த்ததை விட பொருளாதார ரீதியாக நல்ல வெற்றி அடைந்துள்ளது. லப்பர் பந்து திரைப்படம், மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு வந்ததை அடுத்து நாங்கள் மக்களை சந்திக்க வந்துள்ளோம்.  ட்விட்டரில் கொத்தனாரின் மகன் என வைத்துள்ளார்கள் என்ற கேள்விக்கு, என் அப்பா கொத்தனார் தான் என் ஊரிலும் தெருவிலும் என்னை கொத்தனார் மகன் என்றுதான் கூப்பிடுவார்கள் எனவே நான் கொத்தனாரின் மகன் என ட்விட்டரில் வைத்துள்ளேன். இதுதான் என் அடையாளமாக இருந்தது எனவே அதை அப்படியே ட்விட்டரில் வைத்துள்ளேன்.

இளம் இயக்குனர்கள் ஒரு படம் எடுத்து வெற்றி பெற்றவுடன் அடுத்த படமே பெரிய ஹீரோவை நோக்கி செல்கிறார்களே என்ற கேள்விக்கு, வெளியே இருந்து பார்க்கும்போது தான் சின்ன ஹீரோ பெரிய ஹீரோ என்று தெரிகிறது. இது பெரிய செயல்முறை. நான் அந்த வளையில் சிக்க மாட்டேன். நான் கதைக்கான கதாநாயகனையே தேர்வு செய்கிறேன். லப்பர் பந்து படம் பார்த்த பிறகு சிவகார்த்திகேயன், சிம்பு, கார்த்தி உள்ளிட்டோர் வாழ்த்து கூறினர். கண்டிப்பாக இன்னும் ஒரு படம் ஹரிஷ் கல்யாணை கதாநாயகனாக வைத்து ஒரு படம் எடுப்பேன். பழக்கத்திற்கு எதுவும் தேவையில்லை, படத்திற்கு கதை தேவை அது கிடைத்தவுடன் கண்டிப்பாக ஹரிஷ் கல்யாணை வைத்து படம் எடுப்பேன். என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | அரவிந்த் சாமியின் மகன்-மகளை பார்த்துள்ளீர்களா? அப்படியே அப்பா ஜாடை.. வைரல் போட்டோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News