ரேஷன் கார்டுதாரர்களுக்கு அமைச்சர் கொடுத்த குட்நியூஸ்..! அவசரப்படாதீங்க

Ration card | ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு இருப்பு இல்லை என செய்தி வெளியான நிலையில், அதற்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 19, 2024, 01:38 PM IST
  • ரேஷன் கார்டு தாரர்களுக்கு குட் நியூஸ்
  • எல்லோருக்கும் துவரம் பருப்பு நிச்சயம் கிடைக்கும்
  • அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிக்கை
ரேஷன் கார்டுதாரர்களுக்கு அமைச்சர் கொடுத்த குட்நியூஸ்..! அவசரப்படாதீங்க title=

Ration card Good News | தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் ரேஷன் கடையில் விற்பனையாகும் பாமாயில், துவரம் பருப்பை வாங்க குடும்ப அட்டைதாரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், ஒரு சில இடங்களில் துவரம் பருப்பு இருப்பு இல்லை என்ற செய்தி வெளியானதும், பருப்பு பற்றாக்குறையை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை விட்டார். அதற்கு பதில் கொடுத்திருக்கும் உணவுத்துறை அமைச்சர், ஒரு கடையில் இருப்பு இல்லை என்று கூறப்பட்ட காரணத்தை வைத்து தமிழ்நாடு முழுவதும் துவரம் பருப்பு பற்றாக்குறை இருப்பதுபோல் பாஜக எம்எல்ஏ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்திருப்பதாக கூறியுள்ளார். 

துவரம் பருப்பு இருப்பு : அமைச்சர் விளக்கம்

மேலும், துவரம் பருப்பு பற்றாக்குறை என கூறப்பட்ட நியாய விலைக் கடையிலும் 1319 குடும்ப அட்டைகள் உள்ளன. அந்தக் கடைக்கு அக்டோபர் 24 மாதத்திற்கு ஏற்கனவே இருப்பில் இருந்த 53 கிலோவுடன் 1119 கிலோ துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு 800 கிலோ துவரம் பருப்பு நகர்வு செய்யப்பட்டு இதுவரை 605 கிலோ துவரம் பருப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அது போக 248 கிலோ துவரம் பருப்பு இந்தக் கடையில் இருப்புள்ளது. 17.19.2024 ஆம் தேதி கூட 39 குடும்ப அட்டைதாரர்கள் துவரம் பருப்பைப் வாங்கி சென்றுள்ளனர் என அமைச்சர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

மேலும் படிக்க | தீபாவளிக்கு 4 நாள் லீவு... குஷியில் மாணவர்கள், அரசு அலுவலர்கள் - வந்தாச்சு உத்தரவு

துவரம் பருப்பு எப்படி கொள்முதல் செய்யப்படுகிறது?

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் ஒளிவு மறைவற்ற திறந்த வெளி ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2008-இன் படி ஒரு ஆங்கில நாளிதழிலும், தமிழ் நாளிதழிலும் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதலுக்கு விலைப்புள்ளிகள் கோரி விளம்பரம் செய்யப்படும். அதோடு இணைய வழியிலும் (e-tender) விளம்பரம் செய்யப்படுகிறது. இந்தியா முழுதும் செய்யப்படும் விளம்பரங்களைப் பார்த்துச் சமர்பிக்கப்படும் விலைப்புள்ளிகள் மற்றும் மாதிரிப் பொருள்களை (Sample) ஒப்பந்தக் கூராய்வுக் குழு (Tender Scrutiny Committee) ஆய்வு செய்யப்பட்டு, தரம் மற்றும் தகுதிகள் உள்ள நிறுவனங்களின் விலைப்புள்ளிகளைக் குழுமத் துணைக் குழு (Board Sub Committee) ஆய்வு செய்து குறைந்த விலைப்புள்ளிகள் அளித்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதிப் பட்டியலை முடிவு செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். 

துணைக் குழுவில் உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் மற்றும் துணைச் செயலாளர் (பட்ஜெட்) ஆகிய மூன்று இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் இடம் பெற்றுள்ளார்கள். துணைக்குழு ஒப்பந்ததாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விலைக்குறைப்பு செய்து முடிவு எடுத்ததைப் பதினொன்று இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகக் குழு பரிசீலனை செய்து இறுதி முடிவு எடுத்துக் குறைந்த விலைப்புள்ளிகள் அளித்த நிறுவனங்களுக்குக் கொள்முதல் ஆணைகள் வழங்கப்படுகின்றன.

தீபாவளிக்கு துவரம் பருப்பு கிடைக்குமா?

அமைச்சர் சக்கரபாணி துவரம் பருப்பு இருப்பு குறித்து தெளிவான விளக்கம் கொடுத்துவிட்டதால், ரேஷன் கார்டுதாரர்கள் துவரம் பருப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என சந்தேகம் கொள்ள வேண்டாம். தீபாவளிக்கு ரேஷன் கடையில் கிடைக்கும் துவரம் பருப்புடன் சமையல் எண்ணெய் பாமாயில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தட்டுபாடின்றி கொடுக்கப்படும் என தமிழ்நாடு உணவுத்துறை சார்பில் தெளிவாக விளக்கமளிப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Ration Card | தவறவிடாதீர்கள் மக்களே! தமிழக அரசின் ரேஷன் கார்டு இலவச முகாம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News