தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போட்டது தவறான செயல், பூட்டு போட யாருக்குமே அதிகாரம் கிடையாது என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷாலுக்கு எதிரான உறுப்பினர் நேற்று அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். இதனையடுத்து இன்று விஷால் திநகரில் உள்ள சங்க அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.
நேற்று போடப்பட்ட பூட்டை உடைக்க வேண்டும் என்று அங்கு பாதுகாப்பு க்கு இருந்த போலீசாரிடம் முறையிட்டார். அப்போது சாவி எடுத்துவந்து திறக்கலாம் என்று போலீசார் கூறினார். ஆனால் திருட்டுத்தனமாக போடப்பட்ட பூட்டுக்கு போலீசார் ஏன் பாதுகாப்பு அளிக்கிறார்கள் என்றும் அந்த சாவியால் திறக்க முடியாது உடைத்து உள்ளே செல்கிறோம் என்றும் விஷால் வாக்குவாதம் செய்தார்.
இதனையடுத்து வாக்குவாதம் அதிகரித்தால் போலீசார் விஷால் மற்றும் மன்சூர் அலிகானை கைது செய்தனர். நாளை பெரிய படங்கள் வெளியாக உள்ள நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Police who were mute yesterday wen unauthorised ppl locked the doors & gates of TFPC have arrested me & my colleague today for no fault of ours,absolutely unbelievable
We will fight back,wil do everything to conduct Ilayaraja sir event & raise funds to help Producers in distress
— Vishal (@VishalKOfficial) December 20, 2018
இந்நிலையில், நடிகர் விஷால் இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த பதிவில், "தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு நேற்று பூட்டு போடப்பட்டபோது மவுனமாக இருந்த போலீசார், எந்த தவறும் செய்யாத என்னையும் என் ஆதரவாளர்களையும் இன்று கைது செய்தது முற்றிலும் நம்பமுடியாத ஒன்று" என குறிப்பிட்டுள்ளார்.
Targeting me for a simple reason that I want to do good for producers who have lost everything,well I wil continue to do this no matter what. My conscience is Clear,God & Truth is on my side & I will continue to march ahead
NO ONE CAN STOP ME FROM CONDUCTING ILLAYARAJA SIR EVENT
— Vishal (@VishalKOfficial) December 20, 2018
மேலும், மற்றொரு பதிவில் "எல்லாவற்றையும் இழந்த தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்ய விரும்பிய ஒரே காரணத்திற்காக எண்ணெய் இலக்கு வைத்தால், நான் என்ன சிவத்து என எனக்கு தெரியவில்லை. என மனசாட்சி தெளிவாக உள்ளது. கடவுள் & உண்மை என் பக்கத்தில் உள்ளது. நான் முன்னோக்கி அணிவகுத்து செல்வேன். யாரும் எண்ணெய் நிறுத்தமுடியாது குறிப்பாக இளையராஜா அவர்கள் நிகழ்வு" என தெரிவித்துள்ளார்.