இங்கிலாந்தை போல் ADMK வெற்றி பெறும்; DMK தோற்கும்: ஜெயக்குமார்!

இங்கிலாந்தை போல் அதிமுக வெல்லும்; நியூசிலாந்து போல திமுக தோற்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்!!

Updated: Jul 15, 2019, 11:02 AM IST
இங்கிலாந்தை போல் ADMK வெற்றி பெறும்; DMK தோற்கும்: ஜெயக்குமார்!

இங்கிலாந்தை போல் அதிமுக வெல்லும்; நியூசிலாந்து போல திமுக தோற்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்!!

பெருந்தலைவர் காமராசரின் 117ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  "தமிழச்சி தங்கப்பாண்டியன் என்னை பொய்யர் என கூறிவதை குறிப்பிட்டு, திமுகவினர் தான் பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்தவர்கள் என விமர்சித்தார். மேலும், தமிழச்சி தங்கப்பாண்டியன் மக்களவையில் தூங்கும் படம் வெளியாகி உள்ளதாகவும், அவரை நம்பி ஓட்டு போட்ட தென் சென்னை மக்கள் பாவம் எனவும் கூறினார். 

மேலும், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி தோற்பது போன்ற ஒரு தோற்றம் இருந்தது. ஆனால், நியூசிலாந்து அணி தோற்றுவிட்டது. அதே போல் அரசியலில் திமுக ஜெயிப்பது போல் மாயை இருந்தாலும் இறுதியில் இங்கிலாந்தை போல் அதிமுக வெல்லும்; நியூசிலாந்து போல திமுக தோற்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.