மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான அளவு நிதி இருந்தும் கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு வழங்கவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டு...
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிவாரண நிதியை வழங்குமாறு, பிரதமரை நேரில் சந்தித்து, முதலமைச்சர் வலியுறுத்தினார். கஜா புயல் பாதித்த பகுதிகளில், மத்திய குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு நடைபெற்று பல வாரங்கள் கடந்த நிலையில், மத்திய குழுவிடம் இருந்து அறிக்கை இன்னும் வரவில்லை.
இதன் அடிப்படையிலேயே மத்திய அரசு நிவாண நிதியை விடுவிக்கும் என்பதால், அதுகுறித்து நேரில் வலியுறுத்துவதற்காக, தமிழக அரசின் அதிகாரிகள் டெல்லி சென்றனர்.
இதயைடுத்து, இது குறித்து உயர்நீதமன்ற கிளையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசிடம் நிதியிருந்தும் கஜா புயல் நிவாரண நிதியை தரவில்லை என தமிழக அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான நிதி இருந்தும் மத்திய அரசு தரவில்லை என தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
மத்தியக் குழு அளிக்கும் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே தமிழகத்திற்கு நிதி வழங்க முடியும் என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இறுதி அறிக்கை தயாரிக்கவே தமிழக அரசிடம் சந்தேகங்கள் கேட்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து எப்போது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.