சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்துவருகிறது. அந்தவகையில் மே 5ஆம் தேதி அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கவிருக்கிறது.
இந்தச் சூழலில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் ஆதீனங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், அவிநாசி மடாதிபாதி உள்ளிட்டோரும், அமைச்சர் சேகர் பாபுவும் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி, “ஆதீன கர்த்தர்கள், சங்கராசாரியர், ஜீயர்களை உள்ளடக்கிய தெய்வீக பேரவையை மீண்டும் நடத்த வேண்டும்.
ஆதீனங்களுக்கான சட்டத்திட்டங்கள், பழக்க வழக்கங்களின் படி அரசு செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆன்மீக அரசாக செயல்பட்டுவருகிறது என்றார்.
மேலும் படிக்க | முந்தையை அதிமுக அரசின் அலட்சியமே அரசு மருத்துவமனையில் தீ விபத்து: அமைச்சர் விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR