கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில், கடற்கரைகள் மற்றும் இதர பொது இடங்களில், 2021 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, கடந்த மார்ச், 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து அமலில் உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பால், நோய் தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது.
இந்நிலையில், புத்தாண்டில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர இடங்களில், டிசம்பர், 31 இரவு, ஆங்கில புத்தாண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். இதில், பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்கபார்கள். ஆனால், இந்த ஆண்டு, கொரோனா தொற்று (Corona virus) பரவலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பொது இடங்களில் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சில வெளிநாடுகளில், கொரோனா நோய் தொற்று, தற்போது மீண்டும் பரவி வருகிறது. தற்போதுக் கூட இங்கிலாந்தில் (England) கொரோனா உருமாறி, மிக வேகமாக பரவி வருவதாக செய்திகள் வந்துள்ளன. இதனால், நோய் தொற்று பரவாமல் தடுக்க, மேலும் நடவடிக்கைகளை தீவிரபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவை வழக்கம் போல செயல்படலாம் என்றாலும், 31ம் தேதி இரவு நடத்தப்படும், 2021ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது.
டிசம்பர் 31ம் தேதி, ஜனவரி 1ம் தேதி ஆகிய நாட்களில், பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்லவும், அனுமதி இல்லை.
கொரோனா தொற்று பரவலை தடுக்க, மாஸ்க் அணிதல், தனி நபர் இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை, பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி, அரசு எடுத்து வரும், கொரோனா நோய் தொற்று தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும், பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, தமிழக அரசு (TN government) கேட்டுக் கொண்டுள்ளது.
ALSO READ | கொரோனா தடுப்பூசி ஹலாலா ஹராமா.. இஸ்லாமிய மதகுருக்கள் கூறுவது என்ன..!!