தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை உடனே நடத்திட வேண்டும்: ஸ்டாலின்!

பேரவை கூட்டப்படுவதை தள்ளிப்போடுவது தேவையில்லா குழப்பங்கள், நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என திமிக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Jun 10, 2019, 08:17 AM IST
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை உடனே நடத்திட வேண்டும்: ஸ்டாலின்! title=

பேரவை கூட்டப்படுவதை தள்ளிப்போடுவது தேவையில்லா குழப்பங்கள், நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என திமிக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

தமிழகத்தில் நிலவி வரும் முக்கியப் பிரச்சனைகளை பற்றி விவாதிக்க உடனடியாக சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்ணீர் பஞ்சம், குறுவை சாகுபடிக்கு நீர்திறக்கப்படாதது, கர்நாடக அரசு தண்ணீர் திறக்காதது, “நீட்” தற்கொலைகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவை கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து சட்டப்பேரவை கூட்டப்படாததால், பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல், அரசுத் துறை பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆளும் கட்சியினரிடையே நிலவும் நிச்சயமற்ற அரசியல் சூழல் காரணமாக அதிமுக அரசு சட்டப்பேரவை கூட்டத்தை தள்ளிப்போடுமானால், தமிழக ஆளுநர் தலையிட்டு சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்ட உத்தரவிட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

Trending News