ஒற்றைத் தலைமை பிரச்னையில் சிக்கி அதிமுக திண்டாடிவருகிறது. இரட்டை தலைமையையே தொடரலாம் என ஓபிஎஸ் பேசினாலும் எடப்பாடி பழனிசாமியின் மௌனமும், அவரது ஆதரவாளர்களின் செயல்பாடுகளும் அவர் ஒற்றைத் தலைமை என்பதில் தீவிரமாக இருப்பதாக கருத வைக்கிறது.
தனியாக முதலில் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ் தீர்மானம் தொடர்பான கூட்டத்திலும் கலந்துகொண்டார். ஆனால் இபிஎஸ்ஸோ கலந்துகொள்ளவில்லை. ஓபிஎஸ் இவ்வளவு இறங்கிவந்தும் எதற்காக இபிஎஸ் விடாப்பிடியாக இருக்கிறார் என கேள்வி எழுந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து பல மாவட்ட செயலாளர்களுக்கு பூஸ்டர் பாக்ஸ் சென்றதாக நேற்று தகவல் வெளியானது.
அதேசமயம், தான் இறங்கி வந்தும் இறங்க மறுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் ஓபிஎஸ் சில மூவ்களை செய்ய ஆரம்பத்திருப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது.
அதாவது பொதுக்குழு, செயற்குழு நடந்தால்தானே ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழும் எனவே அதனை தடுக்கும் விதமாக தற்காலிகமாக பொதுக்குழுவுவை ஒத்தி வைக்க கோரி நீதிமன்றத்தை ஓபிஎஸ் தரப்பு நாட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் கட்சி விஷயம் நீதிமன்றம் செல்வதில் விருப்பமில்லாத மூத்த நிர்வாகிகளான தம்பிதுரை, செங்கோட்டையன் உள்ளிட்டோர் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தை அதுவும் எடுபடவில்லை என்றே தெரிகிறது.
இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். சொந்த மாவட்டத்திலிருந்தே நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்திருப்பது ஓபிஎஸ்ஸுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், மாவட்ட செயலாளர்களை இபிஎஸ் வளைத்தது போல் தானும் களமிறங்கலாம் என நினைத்திருந்த ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவரது சொந்த மாவட்டத்திலிருந்தே நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி தூக்கியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிசாமிக்கு பன்னீர்செல்வம் விட்டுக்கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சிவபதி வெளிப்படையாகவே குரல் எழுப்பத் தொடங்கியுள்ளார். அவருக்கு அடுத்ததாக சில குரல்களும் எழலாம். எனவே இதே நிலை தொடர்ந்தால் ஓபிஎஸ்ஸுக்கு நிச்சயம் பின்னடைவு ஏற்படலாம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe