திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: இந்த ஆண்டும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, முக்கிய அறிவிப்புகள் இதோ

கொரோனா தொற்று பரவல் காரணமாக 2-வது ஆண்டாக திருக்கார்த்திகை தீபத்திருவிழா பக்தர்களின்றி நடைபெறவுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 6, 2021, 01:12 PM IST
  • இந்த ஆண்டும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பக்தர்களின்றி நடைபெறவுள்ளது.
  • கிரிவலம் செல்லவும் தீப மலையேறவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • திருக்கோவில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: இந்த ஆண்டும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, முக்கிய அறிவிப்புகள் இதோ title=

கொரோனா தொற்று பரவல் காரணமாக 2-வது ஆண்டாக திருக்கார்த்திகை தீபத்திருவிழா பக்தர்களின்றி நடைபெறவுள்ளது. கிரிவலம் செல்லவும் தீப மலையேறவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

திருக்கோவில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். தீபத் திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கான இணையதள முன்பதிவு இன்று தொடங்கியது. இது குறித்த உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பிறப்பித்துள்ளார். 

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் விமர்சையாக தொடங்க உள்ளது.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 10ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட்டு நவம்பர் 19 ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கருவறையில் 4 மணிக்கு பரணி தீபமும் அதனை தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று (Coronavirus) பரவல் வழிகாட்டு நெறிமுறைகள் தளர்வுகளுடன் நடப்பில் உள்ளதால் கடந்த ஆண்டைப் போல 2வது ஆண்டாக திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்.

தீபத் திருவிழா நடைபெற உள்ள நவம்பர் 7ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை, தீபத் திருநாள் மற்றும் பவுர்ணமி நாட்களான நவம்பர் 17 பிற்பகல் 1 மணி முதல் 20ஆம் தேதி வரை உள்ள நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் தினந்தோறும் திருவண்ணாமலை (Thiruvannamalai) மாவட்டத்தைச் சேர்ந்த 3000 உள்ளூர் பக்தர்களும், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சார்ந்த 10 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 13 ஆயிரம் பக்தர்கள் என்ற அளவில் கட்டணம் இல்லாமல் அரசால் தெரிவிக்கப்பட்ட கோவில் நோய்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்யப்படுவர் என்றும் வெளிமாவட்ட மாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்திட திருக்கோவில் இணையதளமான  www.arunachaleswarartemple.tnhrce.in வாயிலாக இணையதள முன்பதிவு செய்து ஒரு நபருக்கு ஒரு நுழைவுச்சீட்டு என்ற முறையில் கட்டணம் இல்லாமல்  நாளை 6-ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொண்டு அதன் அடிப்படையில் அனுமதிக்கப்படுவர் என்றும், தீபத் திருவிழா நாட்களில் சுவாமி திருவீதி உலா கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் திருக்கோவில் வளாகத்திற்குள் ஆகம விதிகளின்படி நடைபெறும் என்றும், குறிப்பாக நவம்பர் 16-ஆம் தேதி மாடவீதிகளில் நடைபெற உள்ள 5 தேரோட்ட நிகழ்வினையும் கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் திருக்கோவில் வளாகத்தில் உள்ளேயே ஐந்தாம் பிரகாரத்தில் ஆகம விதிகளின்படி நடைபெறும் என்றும், நவம்பர் 17 பிற்பகல் 1 மணி முதல் 20ஆம் தேதி வரை கிரிவலம் செல்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததுடன் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும் தீபத் திருவிழா நாட்களில் கூடுதல் சிறப்பு பேருந்து மற்றும் ரயில் வசதி ஏதும் கிடையாது என்றும் ஆண்டுதோறும் நடைபெறும் குதிரை மற்றும் மாட்டுச் சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: நீட் எட்டாக்கனி அல்ல: சாதித்துக் காட்டிய தமிழக அரசு பள்ளி மாணவி 

நவம்பர் 10 மற்றும் 16 ஆகிய 2 தேதிகளில் இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையும் அதேபோல் மற்ற தினங்களில் தினசரி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இணையதளத்தில் முன்பதிவு செய்ய ஆதார் அட்டை (Aadhaar Card) அவசியம் என்றும் திருக்கோவிலுக்கு வருபவர்கள் அனுமதி சீட்டு மற்றும் ஆதார் அட்டை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் யூ டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்கள், திருக்கோவில் இணையதளம், அரசு கேபிள் தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகள் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் பக்தர்கள் மகா தீபத்தை தங்களது வீடுகளிலிருந்து தரிசனம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள்  கிரிவலப்பாதையில் எந்த ஒரு பகுதியிலும் தேவையின்றி கூடாமலும் கூட்ட நெரிசல் ஏற்படுத்தாமல் தகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு பக்தர்கள் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என்றும் ஆட்சியர் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: குடிபோதையில் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்து கலாட்டா செய்த அதிமுகவின் முன்னாள் எம்.பி.! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News