தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தலில்,  அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 10, 2021, 09:45 PM IST
  • 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் வெளியீடு.
  • தமிழ்நாட்டில் வரும் 06.04.2021 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
  • மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு title=

தமிழ்நாட்டில் வரும் 06.04.2021 அன்று நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில்,  அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் கீழ்க்கண்ட 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி (PMK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது. வேட்பாளர்கள் விவரம்:

வரிசை எண் தொகுதி எண் & பெயர் வேட்பாளர் பெயர்

1. 58. பென்னாகரம் திரு. ஜி.கே.மணி, அவர்கள்
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்
தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி

2. 129. ஆத்தூர் (திண்டுக்கல்) திருமதி. ம. திலகபாமா, பி.காம்,  அவர்கள்,
பொருளாளர், பா.ம.க

3. 64. கீழ்ப்பென்னாத்தூர் திரு. மீ.கா. செல்வக்குமார் எம்.ஏ, அவர்கள்,
மாநில அமைப்பு செயலாளர்.

4. 33. திருப்போரூர் திரு. திருக்கச்சூர் கி. ஆறுமுகம்  பி. எஸ்.சி, அவர்கள், 
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மாநில துணைப் பொதுச்செயலாளர்.

5. 150. ஜெயங்கொண்டம் வழக்கறிஞர். கே. பாலு, பி.காம், பி.எல் அவர்கள்
வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவைத் தலைவர்

6. 42. ஆற்காடு திரு. கே.எல். இளவழகன் டி.எம்.இ அவர்கள், 
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர், மாநில துணைப் பொதுச்செயலாளர்,

7. 50. திருப்பத்தூர் திரு. டி.கே. ராஜா அவர்கள்,
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்
மாநில துணைப் பொதுச்செயலாளர்,

8. 59. தருமபுரி திரு. எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பி.எஸ்.சி அவர்கள், 
மாநில துணைப் பொதுச்செயலாளர்,

9. 88. சேலம் மேற்கு திரு. இரா. அருள் பி.எஸ்.சி அவர்கள்,
      மாநில  துணைப் பொதுச்செயலாளர்,

10. 70. செஞ்சி திரு. எம்.பி.எஸ். இராஜேந்திரன், அவர்கள்,
மாநில துணை அமைப்புச் செயலாளர் 

ALSO READ | தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: BJP களம் காணும் தொகுதிகளின் பட்டியல்  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News