India vs Bangladesh: 106 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன வங்காளதேச அணி

அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்த வங்காளதேசம், கடைசியாக 30.3 ஓவரில் 106 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 22, 2019, 05:02 PM IST
India vs Bangladesh: 106 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன வங்காளதேச அணி title=

கொல்கத்தா: பகல் - இரவு ஆட்டமாக இன்று தொடங்கிய இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் முறையாக இந்த போட்டியில் பிங்க் பந்தை (Pink Ball) வீசப்பட்டது. வங்காளதேச அணியின் தோ`தொடக்க வீரர்கள் முதல் இறுதி வரை ஒருவரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்த வங்காளதேசம், கடைசியாக 30.3 ஓவரில் 106 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அந்த அணியில் ஷாட்மேன் இஸ்லாம் 24 ரன்களும், லிட்டன் தாஸ் 24 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் இஷாந்த் 5 விக்கெட்டும், உமேஷ் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தற்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைப்பெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்து விளையாடியது. துவக்கம் முதலே இந்திய வீரர்களின் பந்துவீச்சில் திணறிய வங்கதேசம் ஆட்டத்தின் 58.3-வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்தியா தற்போது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் அதிரடியாக விளையாடி 243(330) ரன்கள் குவித்தார். ரஹானே 86(172) ரன்கள் குவித்தார். அதேப்போல் ரவிந்திர ஜடேஜா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 60*(75) ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 114 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்தது. இதனையடுத்து ஆட்டத்தை டிக்ளர் செய்துக் கொள்வதாக அறிவித்தது. இதைனை அடுத்து இரண்டவாது இன்னிங்ஸை துவங்கினர். 

ஆட்டத்தின் 69.2-வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி 213 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. அணியில் அதிகப்பட்சமாக ரஹிம் 64(150) ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் மொஹமது சமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இந்தியா 1 இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன்கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இது பகல் - இரவு போட்டியாக நடக்கிறது என்பது சிறப்பு. மேலும், இந்த ஆட்டத்தில் இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க் பால்) பயன்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மூன்று போட்டிகளில் கொண்ட டி-20 தொடரில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றுள்ளது. மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. அதாவது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று டெஸ்ட் கொண்ட தொடரிலும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் தலா 120 புள்ளிகளைப் பெற்ற இந்திய அணி, தற்போது வங்கதேச அணிக்கு எதிரான தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் 300 புள்ளிகளை எட்டியுள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News