ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஓய்வு பெற்ற 2457 போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய நிலுவைத்தொகையான ரூ. 497.32 கோடியை வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 2, 2021, 12:50 PM IST
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் title=

சென்னை: இன்று தலைமைச் செயலகத்தில் ஓய்வு பெற்ற 2457 போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய நிலுவைத்தொகையான ரூ. 497.32 கோடியை வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அதுக்குறித்து மக்கள் தொடர்புத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. 

அதில், தமிழ் நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் (Tamil Nadu State Transport Corporation) பணியாற்றி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய  ஓய்வூதிய பணப் (Pension) பயன்களின் நிலுவைத் தொகையான ரூ. 497.32 கோடியினை வழங்கினார். இதன்மூலம் 2457 போக்குவரத்து ஊழியர்கள் பயன்பெருவார்கள். அதற்கு அடையாளமாக ஆறு ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகைக்கான காசோலையை வழங்கினார். இந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆவார்கள். 

ALSO READ | ஓய்வூதியம் பெறுவதில் இனி நோ டென்ஷன், கருணை காட்டியது அரசாங்கம்!

இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகன், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,  தலமைச் செயலாளர் இறையன்பு மற்றும் போக்குவரத்துக் கழகத்தின் செயலாளர், அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil (https://www.facebook.com/ZeeHindustanTamil) மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil (https://twitter.com/ZHindustanTamil) என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News