ஸ்டாலின், உதயநிதி போட்டியிடும் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: அதிமுக

மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரை முருகன், இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 5, 2021, 04:13 PM IST
  • திமுகவை சேர்ந்தவர்கள் G-Pay மூலம் வாக்காளர்களுக்கு ரூ .5 ஆயிரம் விநியோகித்து வருவதாக முருகவேல் குற்றம் சாட்டியுள்ளார்.
  • சன் நியூஸ் சேனலில் தடைசெய்யப்பட்ட வீடியோக்கள், , காட்சிகள் ஒளிபரப்பப்படுவதைத் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை.
  • தமிழக தேர்தலில் வாக்குகளுக்கான பணம் கொடுப்பது தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு முக்கிய பிரச்சினை யாக இருந்து வருகிறது.
ஸ்டாலின், உதயநிதி போட்டியிடும் தொகுதியில்  தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: அதிமுக  title=

திமுக (DMK) கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin)  உட்பட முதல் ஐந்து திமுக தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யுமாறு ஆளும் அதிமுக திங்கள்கிழமை தலைமை தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியது. மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரை முருகன், இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

கொள்த்தூர் தொகுதியில் உள்ள பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ரூ .10,000 கொடுத்துள்ளதாக அதிமுகவின் வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் R.M. பாபு முருகவேல் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுகவை (DMK) சேர்ந்தவர்கள் G-Pay மூலம் வாக்காளர்களுக்கு ரூ .5 ஆயிரம் விநியோகித்து வருவதாகவும் முருகவேல் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக கட்சி சார்பாக  போட்டியிடும் கே.என். நேரு, (திருச்சிராப்பள்ளி மேற்கு), உதயநிதி ஸ்டாலின் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி), ஈ.வி.வேலு (திருவண்ணாமலை) மற்றும் துறை முருகன் (காட்பாடி) ஆகியோர்களுக்கு எதிராக புகார் அளித்துள்ள அதிமுக, இவர்கள் போட்டியிடும் தொகுதிகளில், வாக்காளர்களுக்கு G-Pay ரூ .2,000 முதல் 5,000 வரை பணம் விநியோகிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். 

சன் நியூஸ் சேனலில் தடைசெய்யப்பட்ட வீடியோக்கள், , காட்சிகள் ஒளிபரப்பப்படுவதைத் தடை செய்வதோடு, இதற்கான காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு வெளியிடுமாறு அதிமுக தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.

தமிழக தேர்தலில் (TN ELections) வாக்குகளுக்கான பணம் கொடுப்பது தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு முக்கிய பிரச்சினை யாக இருந்து வருகிறது.

இதனை தடுக்க  தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் மொத்த ரொக்கம் மற்றும் பிற வகைகளில் ரூ. 428.46 கோடி.பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

ஞாயிற்றுக்கிழமை வரை  மொத்தம் ரூ .225.5 கோடி பறிமுதல்  செய்யப்பட்டது. விலைமதிப்பற்ற உலோகம் (தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிற ஆபரணங்கள்) பறிமுதல் ரூ .176.11 கோடி, மதுபானம் (2,75,293.31 லிட்டர்) ரூ .4.61 கோடி மற்றும் பிற பொருட்கள் ரூ. 20.01 கோடி மென்ற அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ALSO READ | உயிருள்ள வரை அரவக்குறிச்சி தொகுதி மக்களுடனான உறவு இருக்கும் : அண்ணாமலை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News