என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்குத் தெரியும்..மத்திய அரசை சாடிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தின் பொருளாதார நிலை நாட்டின் பொருளாதார நிலையை விட மேம்பட்ட நிலையிலேயே உள்ளதாகவும், மத்திய அரசு தங்களை விமர்சிக்கக்கூடிய இடத்தில் இல்லை எனவும் தமிழக நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Written by - Chithira Rekha | Last Updated : May 24, 2022, 11:36 AM IST
  • எங்களுக்கு அறிவுரை வேண்டாம்
  • மோசமான வரிக்கொள்கையால் பொருளாதாரம் பாதிப்பு
  • மத்திய அரசை சாடிய தமிழக நிதியமைச்சர்
என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்குத் தெரியும்..மத்திய அரசை சாடிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் title=

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அண்மையில் குறைத்த மத்திய அரசு, மாநில அரசுகளும் வரியைக் குறைக்க வேண்டுமென வலியுறுத்தியது. சில மாநிலங்கள் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்வினையாற்றி வருகின்றன.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்துள்ள பேட்டியில், நாட்டிலுள்ள பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையிலேயே இருப்பதாகக் குறிப்பிட்டார். தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.60 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.40 ஆயிரம் கோடிகளாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இது மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறையை விட பாதி எனவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | பாலிதீன் கவரில் இருந்து பெட்ரோல்! கல்லூரி மாணவன் அசத்தல்!

மேலும் தமிழகத்தின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம். நாட்டின் பணவீக்கம் 8 சதவீதமாக இருக்கும் நிலையில் தமிழகத்தின் பணவீக்கம் 5 சதவீதம் மட்டுமே உள்ளது. நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு யாரும் சொல்லத் தேவையில்லை. எங்களை விட மோசமாக செயல்படும் நபர்களிடமிருந்து எங்களுக்கு கட்டளைகள் தேவையில்லை எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு செயல்படுபவர்களை நாங்கள் விரும்புவதில்லை. நாங்கள் செய்ய விரும்பாத விஷயங்களைச் செய்யும்படி வற்புறுத்தப்படுகிறோம். மத்திய அரசு ‘கோரிக்கை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாக எனக்கு நினைவில் இல்லை. இதையெல்லாம் அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை என்றே நினைக்கிறேன். மாநிலங்கள் தங்களது சொந்த நிதி மேலாண்மையை நிர்வகிக்க அரயலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. 

 கலால் வரியை உயர்த்திய போதும், கலால் வரிக்கு பதில் செஸ் வரி விதித்த போதும் மத்திய அரசு மாநிலங்களை கலந்தாலோசிக்கவில்லை. மாநிலங்களின் வரி வருவாய் குறைந்தபோது மத்திய அரசு அக்கறை கொள்ளவில்லை. மத்திய அரசின் மோசமான வரிக்கொள்கையினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பழியை மாநிலங்களின் மேல் போடப்பார்ப்பதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டினார். 

மேலும் படிக்க | இனி பெட்ரோல் விலை தினசரி உயரும்...ராகுல் காந்தி விமர்சனம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News