தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 25 புதிய துணை மின் நிலையங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது!
விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி அவர்கள் சட்டப்பேரவையில் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் மாநிலம் முழுவதம் பல்வேறு இடங்களில் புதிய துணை மின்நிலையங்கள் அமைப்பது பற்றிய அறிவிப்பினை அவர் வெளியிட்டார்.
சுமார் 5068 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய எரிசக்தி கொள்கை உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேலையில், தமிழ்நாடு ஊரகச் சாலைகள் திட்டத்தின் கீழ், 5 ஆயிரத்து 500 கிலோமீட்டர் நீள ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும் எனவும் இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.
ஊரகப்பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில் 100 கோடி ரூபாயில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நடப்பாண்டில் 11 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக்கடன், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு 49 நகரங்களில் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவை அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.