'நீட் தேர்வில் அதிகரிக்கும் குளறுபடிகள்... தேவையா இது...?' - அமைச்சர் ரகுபதி சொல்வது என்ன?

TN NEET Exemption: நீட் தேர்வில் ஆண்டுக்கு ஆண்டு குளறுபடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் இத்தனை குளறுபடிகளுக்கு இடையே இந்த நீட் தேர்வு தேவையா என்பதுதான் தமிழகத்தின் கேள்வியாக உள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 13, 2024, 03:30 PM IST
  • நீட்டை யார் விரும்புகிறார்களோ வைத்துக் கொள்ளுங்கள் - ரகுபதி
  • தமிழ்நாட்டில் விரும்பவில்லை, எங்களுக்கு விலக்கு கொடுங்கள் - ரகுபதி
  • தமிழிசை - அமித்ஷா விஷயத்தில் நாங்கள் எந்த ஒரு கருத்தையும் சொல்ல முடியாது - ரகுபதி
'நீட் தேர்வில் அதிகரிக்கும் குளறுபடிகள்... தேவையா இது...?' -  அமைச்சர் ரகுபதி சொல்வது என்ன? title=

TN NEET Exemption Latest News Update: சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தில் புதிதாக சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக சட்டத்துறை அரசு செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர், கர்னல் பேராசிரியர் டாக்டர் என்.எஸ். சந்தோஷ் குமார், துணைவேந்தர், தண்டலு, பதிவாளர் கௌரி ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக புதிதாக அரசு சட்டக் கல்லூரியில் சேரவுள்ள மாணவ மாணவிகளுக்கு ஆணை வழங்கிய அமைச்சர் ரகுபதி வாழ்த்துக்களையும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,"டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் படிப்பதற்கு 7042 பேர் விண்ணப்பித்துள்ளனர், அதில் 6860 பேர் தேர்வு செய்யப்பட்டடுள்ளனர். 182 பேர் நிராகரிக்கப்பட்டனர். 

தமிழ்நாட்டில்தான் சிறப்பான சட்டக்கல்லூரி

624 பேருக்கு இந்த ஆண்டு இங்கு இடம் தரப்படுகிறது. முதலில் 24 பேருக்கு அனுமதி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 23 அரசு சட்டக்கல்லூரிகள் உள்ளது. 14 ஆயிரத்து 922 விண்ணப்பங்கள் வந்துள்ளது. அதில் 62 தகுதியற்றது. மீதமுள்ளது 16 ஆயிரத்து 984 ஆகும். 2043 மொத்த இடங்கள் முழுமையடையும். 2043 பேர் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க | நீட் தேர்வை நிறுத்த முதல்வர் முயற்சி செய்து வருகிறார் - கனிமொழி எம்பி பேட்டி

இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் சட்டக்கல்லூரி தமிழ்நாட்டில்தான். விண்ணப்பங்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அதன் அடிப்படையில் மட்டும் கல்லூரியில் சேர்க்கப்படுகிறது. 

நீட் குளறுபடிகள்

நீட் தேர்வில் ஆண்டுக்கு ஆண்டு குளறுபடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனக்கு கிடைத்த தகவலின் இன்றைக்கு கூட 1526 மாணவ மாணவிகளுக்கு மீண்டும் கருணை மதிப்பெண் போட்டுள்ளனர். மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று கூறியுள்ளனர். இப்படி பல்வேறு குளறுபடிகளுக்கு இடையே இந்த நீட் தேர்வு தேவையா என்பதுதான் தமிழகத்தின் கேள்வியாக உள்ளது. 

யார் விரும்புகிறார்களோ வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் தமிழ்நாட்டில் விரும்பவில்லை, எங்களுக்கு விலக்கு கொடுங்கள். அதுதான் எங்களுடைய கோரிக்கை, உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கு வரும்போது சட்டத்துறையும், மக்கள் நல் வாழ்வுதுறையும் இதையெல்லாம் சுட்டிக்காட்டும். தமிழ்நாட்டின் முதல்வர் சொன்னதுபோல் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதுதான் எங்களுடைய லட்சியம்" என்றார். சட்டமன்றத்தில் என்னென்ன மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்பது குறித்த கேள்விக்கு, "சட்டமன்றம் கூடும்போது முக்கியமான மசோதா வரும், வராமலும் போகும். முன்னதாக சொன்னால் அதில் ரகசியம் இருக்கிறது" என்றார். 

அமித் ஷா - தமிழிசை சர்ச்சை

தொடர்ந்து, நேற்று ஆந்திராவில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி மேடையில் பாஜகவின் அமித் ஷா - தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடல் என்பது பெரும் சர்ச்சை கிளப்பியிருந்தது. அதுகுறித்து அமைச்சர் ரகுபதியிடம் கேள்வி எழுப்பியதற்கு,"மற்றொரு கட்சி விவகாரத்தில் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை, தமிழர்கள் எங்கு அவமதிக்கபட்டால் அதற்காக வருத்தப்படுபவர்களும், குரல் கொடுக்க கூடியவர்களும் நாங்கள்தான். உலக தமிழர்கள் எங்கேயும் அவமதிக்கபடுவது வெளிப்படையாக தெரிந்தால் நாங்கள் நிச்சயமாக கண்டிப்போம். இது அவர்களது உட்கட்சி விவகாரம், வெளிப்படையான கருத்து தெரியாத வரைக்கும் நாங்கள் எந்த ஒரு கருத்தையும் சொல்ல முடியாது" என பேட்டியளித்தார்.

மேலும் படிக்க | குவைத் தீ விபத்து : 5 தமிழர்கள் உயிரிழப்பு - உதவி எண்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News