TN Lockdown: தமிழகத்தில் ஊரடங்கு தொடருமா, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

கொரோனா தொற்று காரணமாக தற்போது 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 10, 2021, 09:38 AM IST
  • 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு
  • தினசரி தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைவு
  • தரவுகளின் அடிப்படையில் ஊரடங்கு
TN Lockdown: தமிழகத்தில் ஊரடங்கு தொடருமா, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை title=

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை (Corona Second Wave) மெல்ல மெல்ல குறைந்துகொண்டு வருகிறது. மிக அதிகமாக இருந்த ஒரு நாள் தொற்றின் அளவு தமிழகத்தில் (Tamil Nadu) தற்போது படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது. 

இதற்கிடையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் (TN CM MK Stalin) மேலும் கடுமையாக்கி, கடந்த மே 24 ஆம் தேதியில் இருந்து தளர்வுகள் எதுவும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த முழு ஊரடங்கு (Full Lockdown) உத்தரவு 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி தினசரி தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 19 ஆயிரம் என்ற எண்ணிக்கைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து 7 ஆம் தேதியில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

ALSO READ | FrontLine Workers: முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசு அறிவிப்பு

இந்த நிலையில், தமிழகத்தில் (Tamil Nadu) ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தரவுகளின் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் தொடர்பாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் வெளியிடுவார்.

இதற்கிடையில் நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரு நாளின் தொற்று எண்ணிக்கை 17 ஆயிரத்து 321 ஆக குறைந்திருந்தது. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்புகளில் அந்த சூழ்நிலை எழவில்லை.

ALSO READ | இலவச தடுப்பூசி: பிரதமரின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News