வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த நிறைமாத கர்ப்பிணி மீட்பு!

வேளச்சேரியில் வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த நிறைமாத கர்ப்பிணி மீட்பு  

Written by - ZEE Bureau | Last Updated : Nov 8, 2021, 01:50 PM IST
வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த நிறைமாத கர்ப்பிணி மீட்பு!

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை தண்ணீரில் தத்தளித்து வருகிறது. ஓயாமல் பெய்து வரும் மழையால் மக்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.  பல சுரங்கப்பாதைகள் முழுவதும் நீரினால் முற்றிலும் மூழ்கிவிட்டது. அதுமட்டுமல்லாது பல்வேறு தடங்களிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, இடுப்பளவு தண்ணீரில் தத்தளிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இரு தினங்களாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.  இந்நிலையில் வேளச்சேரி பகுதியில் உள்ள AGS காலனி என்ற பகுதியில் ஜெயந்தி என்ற நிறைமாத கர்ப்பிணி ஒருவர் மழை வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தார். இதுகுறித்து வேளச்சேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலையறிந்த காவல்துறையினர் படகு ஒன்றின் மூலம் ஜெயந்தி மற்றும் அவரது கும்பத்தினர் மொத்தம் 4 பேரை மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

rain

 

ஏற்கனவே மழை வெள்ளம் காரணமாக வேளச்சேரி மேம்பாலத்தின் மீது வாகன ஓட்டிகள் தங்களது கார்களை வரிசையாக நிறுத்தி வைத்த நிகழ்ச்சி சமூக வலைதளதளங்களில் வைரலானதை தொடர்ந்து, தற்போது கர்ப்பிணி பெண்ணை மீட்ட சம்பவமும் வைரலாகி வருகிறது. மேலும் காவல்துறையினரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ALSO READ சென்னையில் இன்று மின்சார ரயில்கள் இயங்குமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News