துரிதமாக செயல்பட்டு விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளரை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
கோவை (Coimbatore) மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பனியாற்றி வருபவர் நித்யா. இவர் நேற்று மேட்டுப்பாளையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மக்கள் சபை நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக மேட்டுப்பாளையம் நோக்கி தனது அலுவலக வாகனத்தில் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
ALSO READ:TN Rain Live Update: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கை
அப்போது பொகளூர் பெட்ரோல் பங்க் அருகே தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி இருவரும் பயணித்த நிலையில் நாய் ஒன்று குருக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி இருவரும் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் மனைவிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த ஆய்வாளர் நித்தியா உடனடியாக வாகனத்தை நிறுத்தி தனது ஓட்டுநர் வெங்கடேஷ் உதவியுடன் சாலையில் காயத்துடன் படுத்து கிடந்த பெண்ணை தூக்கி சென்று முதலுதவி சிகிச்சை செய்து மேல் சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பெண் காவல் (Police) ஆய்வாளர் நித்தியா அவர்களின் இந்த செயலை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். அவசர பணிக்காக சென்று கொண்டிருந்த போதிலும், நிலைமையின் முக்கியத்துவம் கருதி, அவர் துரிதமாக செயல்பட்ட விதம் அவருக்கு பல பாராட்டுதல்களை பெற்றுத் தந்துள்ளது.
ALSO READ: தூத்துக்குடி கள்ளச் சந்தையில் டீசல் விற்பனை; போலீசார் நடவடிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR