டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிரடியான சீர்திருத்தங்கள்!!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகலில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

Updated: Feb 15, 2020, 11:37 AM IST
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிரடியான சீர்திருத்தங்கள்!!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகலில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்த செய்திகள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த முறைகேடுகளை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் முறைகேடுகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து 40க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. அந்தவகையில் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இருநிலை தேர்வுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும். 

காலை 10 மணிக்கும் நடைபெறும் தேர்வுக்கு தேர்வர்கள் காலை 9 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வருதைத் தர வேண்டும். தேர்வெழுதும் தேர்வர்களின் மெய்த்தனமையை உறுதி செய்ய, விதியை விளக்க 2 மணிக்கே வரவேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு அறிவித்துள்ளது.