லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி... வைரலாகும் Video!

லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்திற்கு இடையே 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கெயெழுத்தாகியுள்ளன!

Last Updated : Aug 29, 2019, 08:33 PM IST
லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி... வைரலாகும் Video! title=

லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்திற்கு இடையே 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கெயெழுத்தாகியுள்ளன!

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. முதற்கட்டமாக லண்டன் சென்றடைந்த அவருக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

லண்டனில் வருகிற 1-ஆம் தேதி வரை தங்கி இருந்து, அங்குள்ள சில மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணித்திறன் மேம்பாடுகள் குறித்து நேரில் பார்வையிடுகிறார். 

இந்நிலையில் லண்டன் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்திற்கு இடையே 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கெயெழுத்தாகியுள்ளன. லண்டன் நேரப்படி காலை 9 மணியளவில் இங்கிலாந்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பயனாளர்களின் பணி தரம் மேம்பாடுதலை கண்டறிந்து, அதனை நமது மாநிலத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனித வள மேம்பாட்டு நிறுவனத்தினரை முதல்வர் பழனிசாமி சந்தித்தார். 

இச்சந்திப்பின் போது சுகாதாரத்துறை தொடர்பான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கொசுக்களால் பரவும் தொற்று நோய்களை முழுமையாக கட்டுப்படுத்துவது, மருத்துவர் மற்றும் செவிலியர் பணி பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் கையெழுத்தாகின. 

இந்நிகழ்வின் போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது, முதல்வர் பழனிசாமி, சுகாதார நலத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இருவரும் கோட், சூட் அணிந்திருக்கும் வீடியோ தற்போது இணைத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதனிடையே தமிழக அரசு விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள ஏர் ஆம்புலன்ஸ் விமானம் வாங்குவது குறித்தும் அங்குள்ள நிறுவனத்திடம் பேச்சுவர்த்தை நடந்தப்பட்டுள்ளது. இந்துஜா உள்ளிட்ட பெரிய  தொழில் நிறுவன அதிபர்களையும் சந்தித்து பேச முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Trending News