பஸ் கட்டணத்தில் மாற்றம் வருமா? இன்று எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் சந்திப்பு!!

இன்று பகல் 12 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்திப்பு பேசுகின்றனர்.

Last Updated : Feb 13, 2018, 09:11 AM IST
பஸ் கட்டணத்தில் மாற்றம் வருமா? இன்று எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் சந்திப்பு!! title=

கடந்த மாதம் தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பொது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பல அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் கட்டணம் திரும்ப பெறுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கபப்ட்டது. ஆனால் தமிழக போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் இயங்குவதால் கட்டணம் உயர்த்தப்பட்டது என தமிழக அரசு கூறியது. ஆனாலும் பஸ் கட்டணம் உயர்வுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றதால், பஸ் கட்டணம் சற்று குறைத்தது தமிழக அரசு.

இந்நிலையில், அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் மு.க. ஸ்டாலின் குழு ஒன்றை அமைத்தார்.

இந்த குழு ஆய்வு செய்து அறிக்கையை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அளித்துள்ளனர். இதனையடுத்து, இந்த ஆய்வு அறிகையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுப்பதற்காக நேரம் கேட்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து இன்று மதியம் 12 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

இந்த சந்திப்பிற்கு பிறகு பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறப்படும்மா? என பொது மக்கள் எதிர்பார்கின்றனர்.

Trending News